மேலும் அறிய

Maamannan: பெட்ரூமில் வடிவேலு ஃபோட்டோ... யார் மூலமாவது அவர பாப்பேன்னு நினைச்சேன்.. சுவாரஸ்யம் பகிர்ந்த மாரி செல்வராஜ்!

"வடிவேலு அதிக வாழ்க்கையை வாழ்ந்தவர். எல்லா விஷயங்களுமே அவருக்குத் தெரிகிறது. நம்மை ஆச்சர்யப்படுத்துவார்" - மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன்.29ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜூன்.16) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 5 மில்லியன் பார்வையாளர்களை இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது.  இந்நிலையில், மாரி செல்வராஜ் தன் சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் வடிவேலு பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:“நான் என் பெட்ரூமில் இளையராஜா சார், வடிவேலு சார் இருவரது ஃபோட்டோக்களையும் தான் மாட்டி வைத்துள்ளேன். சென்னைக்கு வந்த முதல் வீட்டில் தொடங்கி இவர்களது ஃபோட்டோக்களை மாட்டி வைத்துள்ளேன். வடிவேலு சாரை சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அது யார் மூலமாவது எப்படியாவது நடக்கும் என நினைத்தேன், ஆனால் நான் கதை சொல்லப் போய் அது நடக்கும் என நினைக்கவில்லை. 


Maamannan: பெட்ரூமில் வடிவேலு ஃபோட்டோ... யார் மூலமாவது அவர பாப்பேன்னு நினைச்சேன்.. சுவாரஸ்யம் பகிர்ந்த மாரி செல்வராஜ்!

நான் மாமன்னன் கதை சொல்லி ஓகே செய்த பின் தான் முதல் ஃபோட்டோவே அவருடன் எடுத்தேன். அதற்கு முன் அவரை நான் சந்தித்ததே இல்லை.  வடிவேலு படத்தில் தான் கடந்த 10 ஆண்டுகளா காமெடி செய்திருக்கிறார். ஆனால் கடைசி 10 ஆண்டுகளா அவர் சீரியஸான ஆக்ரோஷமான காலக்கட்டத்தில் தான் இருந்திருக்கார். அந்த வடிவேலு தான் எனக்குத் தேவைப்பட்டார். வடிவேலு என்னை விட அதிகமான வாழ்க்கை வாழ்ந்தவர். எல்லா விஷயங்களுமே அவருக்குத் தெரிகிறது. நம்மை ஆச்சர்யப்படுத்துவார்.

‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ படம் பார்த்து நீயும் நானும் இதை செய்ய வேண்டும் எனக் கூறி ஒரு இரவு முழுவதும் பேசினார். அந்தப் படம் நான் செய்ய வேண்டும், நீ அதை எடுக்க வேண்டும் மாரி என என்னை டார்ச்சர் செய்தார். அவரிடம் அந்த அளவு விஷயங்கள் உள்ளன.

எல்லாரும் சொல்வது போல் எனக்கும் அவருக்கும் பிரச்னைகள் வந்ததில்லை. அவர் கதை கேட்டது முதலே இந்தக் கதையை உள்வாங்கிக் கொண்டு தான் ஸ்பாட்டுக்கு வந்தார். நான் படம் முழுவதும் உக்கிர புத்திரனா வர வேண்டும் அவ்வளவு தானே என சொல்லி படத்தில் நடிக்க வந்தார். அந்த வார்த்தையில் இருந்து அவர் பின் வாங்கவே இல்லை” எனப் பேசியுள்ளார்.

நாளை (ஜூன்.18) நண்பகல் 12 மணிக்கு மாமன்னன் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்துள்ள பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget