Maamannan release date: தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகிறதா மாமன்னன்..? ஸ்கெட்ச் போடும் உதயநிதி.. அப்டேட் இதுதான்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் இயக்குனரின் அடுத்த படைப்பு :
"பரியேறும் பெருமாள்" மற்றும் "கர்ணன்" போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மாமன்னன்". உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாஃசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை தேனி ஈஸ்வர் மேற்கொள்ள படத்தொகுப்பை செல்வா செய்ய எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆர் கே.
. @Udhaystalin - @KeerthyOfficial - Dir @mari_selvaraj 's #MaaMannan is looking at a possible Tamil New Year release in 2023.. (Apr 14th)
— Ramesh Bala (@rameshlaus) November 16, 2022
மாமன்னன் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகிறதா ?
அரசியல் சார்ந்த இப்படத்தில் நடிகர் வடிவேலு எம்.எல்.ஏ வாகவும், உதயநிதி ஸ்டாலின் அவரின் மகனாகவும் நடித்துள்ளனர். பஹத் பாஃசில் வில்லனாக நடித்துள்ள இப்படம், அரசியல்வாதிகளின் வாழ்க்கையை சுற்றி நகர்கிறதாக கூறப்படுகிறது. மாமன்னன் படப்பிடிப்பு செப்டம்பர் 18ம் தேதி முடிவடைந்தது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மிஷ்கின் காணப்பட்டதால், அவர் கேமியோ ரோலில் நடித்திருக்கலாம் என யூகிக்கின்றனர் சினிமா வட்டாரங்கள். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 'மாமன்னன்' திரைப்படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும்.
It’s dark, edgy, twisted & thrilling in every way possible.⚠️⛓
— Red Giant Movies (@RedGiantMovies_) November 16, 2022
Book your tickets for #KalagaThalaivan soon, in cinemas this Friday. @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @ArrolCorelli @MShenbagamoort3 #RArjunDurai @kalaignartv_off pic.twitter.com/3ld2BqvOr2
கலகத் தலைவன் நாளை வெளியாகிறது :
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கலகத் தலைவன்' திரைப்படம் நவம்பர் 18ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அதனால் மிகவும் மும்மரமாக விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். படத்தின் ரிலீசுக்கு பிறகு மாமன்னன் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.