‛இதோ பாருங்க விருதுகளை...’ சர்வதேச திரை விழாவில் நான்கு விருதுகளை குவித்த மாமனிதன் படம்!
ஓடிடியில் சக்கை போடு போட்ட மாமனிதன்.. விருதுகளை குவித்து வரும் இயக்குநர் சீனு ராமசாமி
ட்ரீம் கேட்சர் நடத்திய சர்வதேச திரை விழாவில் விஜய் சேதுபதி நடித்த, மாமனிதன் படம் 4 விருதுகளை பெற்றுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்சனை முளைத்த நிலையில், நீண்ட நாட்களாக இந்தப்படம் கிடப்பிலேயே இருந்தது.
அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார். அப்படி இப்படியுமாக இந்தப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்தக்கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில்,இந்தப்படத்தின் மீது அதே மாதிரியான எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வருகை தந்து படத்தை கண்டனர்.
View this post on Instagram
படம் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்த போதினும், கதையின் ப்ளாட் அதரபழையதாக இருந்த காரணத்தால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை என்று விமர்சித்தனர். அதனால் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்து ரேஸில் இருந்து வெளியேறியது மாமனிதன். அதனைத்தொடர்ந்து ஆஹா ஓடிடி தளம் மாமனிதன் படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. தியேட்டரில் காலை வாரிய ‘மாமனிதன்’ ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ஆஹா குழு படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக்கொண்டாடியது. தொடர்ந்து பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட ‘மாமனிதன்’ அங்கும் பல விருதுகளை வென்று வருகிறது.
❤️ 🙏@VijaySethuOffl @thisisysr @gurusoms @SGayathrie @U1Records @YSRfilms @shajichen @sreekar_prasad @mynnasukumar @onlynikil @CtcMediaboy pic.twitter.com/sewZEkJXYP
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) September 28, 2022
தற்போது, சிறந்த இயக்குநருக்கான விருது, சிறந்த குடும்ப படத்திற்கான விருது , சிறந்த திரைக்கதையிற்கான விருது என மூன்று விருதுகளை சீனு ராமசாமி பெற்றுள்ளார். அதுபோல், சிறந்த நடிகருக்கான விருதை, நடிகர் விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.