A R Rahman: ஏ.ஆர்.ரஹ்மானின் வித்தியாசமான பழக்கத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இருக்கும் வினோதமான பழக்கம் ஒன்றைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார் பாடலாசிரியர் ஜாவெத் அக்தர்
ஏ.ஆர் ரஹ்மான்
இந்திய சினிமாவின் மிகப்பெரும் அடையாளமாக இருந்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான். எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்தாலும் ரஹ்மானிடம் வரும் ஒரே வரி ‘ எல்லா புகழும் இறவனுக்கே’ என்பது தான். ஆஸ்கர் மேடை முதல் யூடியுப் சேனல் வரை எங்கு பேசினாலும் அன்பை மட்டுமே முதன்மையாக பேசி வருகிறார் ரஹ்மான். ஏ. ஆர் ரஹ்மான் பற்றி பாடலாசிரியர் ஜாவெத் அக்தர் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
ஸ்டுடியோவில் மெழுகுவர்த்தி ஏற்றுவது
ரஹ்மான் பற்றி பேசிய ஜாவெத் அக்தர் ‘ ரஹ்மானிடம் ஒரு வினோதமான பழக்கம் இன்றுவரை இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை அவரது ஸ்டுடியோவிற்குள் நுழைந்ததும் அங்கு இருக்கும் ஒரு மெழுகுவர்த்தியை அவர் ஏற்றி வைப்பார். ஆரம்பத்தில் நான் இதைப் பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் ஒரு நாள் என் முகத்தைப் பார்த்து அவரே அதை எனக்கு விளக்கினார். நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே மிஷின் தான்.
நம்மைச் சுற்றி உண்மையான ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் . இந்த மெழுகுவர்த்தி மிஷின் கிடையாது. இதில் இருந்து வரும் வெளிச்சம் மிஷின் கிடையாது. மிஷின்களைக் காட்டிலும் இந்த உலகத்தில் உண்மையான நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்த மெழுகுவர்த்தி உணர்த்துகிறது. “ என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்
ரஹ்மான் கொடுத்த அறிவுரை
தொடர்ந்து பேசிய ஜாவெத் அக்தர் “ ஒரு முறை ஒரு படத்தின் தயாரிப்பாளர் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டை உருவாக்க சொன்னார். அவர் சென்ற பிறகு எப்படி ஒருவர் இப்படி முட்டாள்தனமாக பேச முடியும் என்று ரஹ்மானிடம் கேட்டேன். அதற்கு அவர் நாம் பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் ஆனால் அதே நேரத்தில் நமது வேலையில் நாம் சமரசம் செய்துகொள்ள கூடாது. நம்முடைய வேலையின் தரம் குறையாமல் அவர்களையும் நாம் திருப்தி படுத்த முயற்சி செய்ய வேண்டும் . நாம் நமக்கு பிடித்த மாதிரி மட்டுமே இசையமைத்தோம் என்றால் எல்லா பாடல்களும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்றார் ரஹ்மான். வயதில் அவர் என்னைவிட சிறியவர் என்றாலும் அவரது இந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்’ என்று ஜாவெத் அக்தர் தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க : Kubera: ரசிகர்களே! குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவில் லுக்கை பாருங்க!
Dhanush: "நான் 8ம் வகுப்பு பாஸ் ஆனதுக்கு தனுஷ்தான் காரணம்" மனம் திறந்த நடன இயக்குனர் பாபா பாஸ்கர்!