Leo Update: விஜய் பிறந்தநாளைக் குறிவைக்கும் லோகேஷ்... தரமான லியோ அப்டேட் இருக்கு!
ஏற்கெனவே விக்ரம் ட்ரெய்லரில் கமல்ஹாசன் பேசிய வாய்ஸ் ஓவர் நமக்கு நினைவிருக்கிறது. அதே போல் லியோ டீஸரிலும் அவரது குரலில் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் டீஸரை லோகேஷ் கனகராஜ் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது . உலக நாயகன் கமல்ஹாசனின் குரலில் இந்த டீஸர் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லியொ’. லோகேஷ் கனகராஜின் சினிமேட்டிக் யுனிவர்சில் ஒன்றாக லியோ படம் இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு கூடியிருக்கும் தருணத்தில் தற்போது வெளியாகி இருக்கும் மற்றுமொரு தகவல் விஜய் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி வரவிருக்கும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது படக்குழு. விஜய்யின் பிறந்தநாளன்று லியோ படத்தின் டீஸரை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சிறப்பான சம்பவம் என்னவென்றால் இந்த டீஸரில் உலக நாயகன் கமல்ஹாசனின் குரல் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே விக்ரம் ட்ரெய்லரில் கமல்ஹாசன் பேசிய வாய்ஸ் ஓவர் நமக்கு நினைவிருக்கிறது. அதே போல் லியோ டீஸரிலும் அவரது குரலில் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் டத், கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான , மேத்தியு தாமஸ் ஆகியவர் நடிக்கிறார்கள்.
தொடக்கத்தில் சஞ்சய் தத் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்னும் தகவல் வெளியாகியிருந்தது. அண்மையில் வெளியான தகவலின்படி படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு மற்றும் விஜய்
லியோ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு இணையாக ஜோதிகா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ்
லியோ படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை வரிசையில் வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கார்த்தியுடன் கைதி 2 ஆம் பாகம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் கடைசி படமாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங், குரு சோமசுந்தரம், விவேக் எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.