Lokesh Kanagaraj - Prabhas: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ்..? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் என மாஸ் ஹிட்கள் கொடுத்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த படத்துக்காக நடிகர் பிரபாஸ் உடன் கைக்கோர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலிவுட்டின் முக்கிய இயக்குநராக உருவெடுத்த லோகேஷ்
சினிமாவை இலக்காகக் கொண்டு தன் வங்கிப் பணியை உதறிவிட்டு கோலிவுட்டில் மாநகரம் படம் மூலம் கால் பதித்த லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே ரசிகர்களை கவனிக்க வைத்து பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து கார்த்தியின் கைதி மூலம் இரண்டாவது படத்திலும் மாஸ் காண்பித்த லோகேஷை கோலிவுட் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் என மாஸ் ஹிட்கள் கொடுத்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் விஜய் உடனான கூட்டணியில் லியோ படம் முழுவீச்சில் உருவாகி வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாக உள்ளது. இச்சூழலில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபாஸ் உடன் அடுத்த படம்
தன் அடுத்த படம் மூலம் லோகேஷ் கனகராஜ் டோலிவுட் சினிமாவில் கால் பதிப்பதாகவும், நடிகர் பிரபாஸ் உடன் லோகேஷ் கைக்கோர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் பிரபாஸ் உடன் நல்ல நட்புறவில் கடந்த மூன்று ஆண்டுகளாக லோகேஷ் இருந்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், லியோ படத்தை முடித்த பின் பிரபாஸ் படத்துக்காக ஸ்க்ரிப்ட் வேலைகளை லோகேஷ் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலியில் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக உருவெடுத்தது முதல், அவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்ஒபார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்ததாக கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் பிரபாஸ் கைக்கோர்க்கும் திரைப்படம் மீது ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
லோகேஷை லாக் செய்த நிறுவனம்
இதனிடையே ஏற்கெனவே தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷூக்கு ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து அவரை பிரபாஸ் படத்துக்காக புக் செய்துள்ளதாகத் தகவல்கள் பரவின.
இந்நிலையில் லோகேஷ் உடன் அடுத்ததாக பிரபாஸ் கைக்கோர்ப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அவரது ரசிகர்களையும் கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மற்றொருபுறம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, லோகேஷ் இயக்கியுள்ள லியோ படத்தின் நா ரெடி பாடல் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பெரிய அளவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: Actor Vijay Video: குழந்தைகளுடன் சேர்ந்துட்டா தளபதி எப்பவுமே க்யூட்தான் - நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்