மேலும் அறிய

LEO Update: ’ரெடியா?’ .. ஒற்றை வார்த்தையால் ரசிகர்களை சூடேற்றிய லோகேஷ்.. லியோ அப்டேட் கன்ஃபார்ம்..!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். 

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். 

மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் பேனரில் லலித்குமார் இந்தப்  படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ் உள்ளிட்டோரும் பணியாற்றுகின்றனர். 

Bommai Review: லாஜிக்கே இல்லாத கதை.. ஆனால் மேஜிக் பண்ணியதா? - பொம்மை படத்தின் விமர்சனம் இதோ..!

லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. படமானது டைட்டில் வெளியானபோதே வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் வருகிறது.

அன்றைய தினம் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக லியோ படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை தனது சமூக வலைத்தளப்பக்கத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்வீட்டில் ‘ரெடியா?’ என கேட்டுள்ளார். இதனால் லியோ படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் அப்டேட் என்னவாக இருந்தாலும் எங்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் தான் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்! ரசிகர்களுக்கு சந்தோஷமா? சங்கடமா? இதோ விமர்சனம்! 

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் டீசர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்பட்டது. இந்த டீசரானது  நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த சினிமாவும் பெரும் எதிர்ப்பாப்பை லியோ படக்குழு மீது வைத்தது.  அதேசமயம் இதே நாளில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 68 ‘ படத்தின் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுவதால் இந்த முறை டபுள் ட்ரீட் உறுதியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
Modi to Meet Trump?: நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
Modi to Meet Trump?: நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
Embed widget