மேலும் அறிய

1 Year Of Vikram : நாயகன் மீண்டும் வந்தான்.. விக்ரம் ரிலீஸாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு..!

கடந்த ஆண்டு கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது 

விக்ரம் படத்தின் வெற்றி கமல் மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல வகைகளில் பெருமை சேர்த்தது. கோலிவுட் சினிமாவில் தமிழ் நாட்டில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தினை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் விக்ரம். தமிழ்நாட்டில் மட்டுமே 181 கோடி வசூல் செய்துள்ளது விக்ரம் திரைப்படம். கிட்டதட்ட 113 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உலகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடி வசுல் செய்தது இந்தப் படம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் அதிகப்படியான வசூல் செய்த திரைப்படம் விக்ரம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு கமல் நடித்த உத்தமவில்லன் வெளியான சமயத்தில் பெரியளவிலான வரவேற்பைப் பெறவில்லை. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தே மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. அதே ஆண்டில் கமல் நடித்த மற்றொரு படமான தூங்காவனம் திரைப்படமும் கடும் எதிர்பார்ப்பிற்குப் பின் தோல்வியடைந்தது. பிரெஞ்சு திரைப்படமான ஸ்லீப்லெஸ் நைட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் தூங்காவனம். அடுத்ததாக மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற த்ரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேகான பாபநாசம் திரைப்படம் வெளியானது.

மலையாளத்தைப் போலவே தமிழிலும் பாபநாசம் திரைப்படம் பெரியளவில் வெற்றியடைந்தது . இதனைத் தொடர்ந்து கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது பாபநாசம் படத்தைத் தவிர்த்து கமல் நடிபில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.

இதே சமயத்தில் கமலின் தயாரிப்பு நிறுவனமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து அடுத்தடுத்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்தன. விக்ரம் படத்திற்கு முன் ராஜ்கமல் கடைசியாக தயாரித்த திரைப்படம் கடாரம் கொண்டான். விக்ரம், அப்ஷராஹாசன் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தன. கடாரம் கொண்டான் திரைப்படம் கடும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்  ராஜ்கமல் நிறுவனத்தை நிலைநிறுத்த அதற்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அந்த வெற்றியைக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.

ஒரு படத்தின் ஒரு பாதிவரை கமலை காட்சியில் காட்டாமல் வெற்றிபெற செய்தார் லோகேஷ் கனகராஜ். அதே நேரத்தில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகிய நடிகர்களையும் கமலையும் ஒரே திரையில் சேர்ந்து நடிக்க வைத்ததிலும் லோகேஷ் கனகராஜின் முயற்சி மெச்சத்தக்கது.     

தலைப்பு செய்திகள்

முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!
சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!
2027 ஆஸ்கர் தேர்வில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் !
2027 ஆஸ்கர் தேர்வில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் !
இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’
இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘SMASH’

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம் - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம் - வானிலை அறிக்கை
Fishermen Alert: தமிழக மீனவர்கள் இன்று கடலில் செல்லக்கூடாத பகுதிகள், புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - வானிலை மையம் வார்னிங்
தமிழக மீனவர்கள் இன்று கடலில் செல்லக்கூடாத பகுதிகள், புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - வானிலை மையம் வார்னிங்
Rasi Palan Today (22-09-2026): கன்னி ராசிக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய முழு பலன்கள் இதோ!
Rasi Palan Today (22-09-2026): கன்னி ராசிக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு? - இன்றைய முழு பலன்கள் இதோ!
Upcoming CNG Cars: ஃபேன் ஃபேவரட் - 7 சீட்டர் டூ மிட் சைஸ் SUV வரை ..! புதுசா CNG ஆப்ஷனில் வரப்போகும் 5 கார்கள் - விலை, லாஞ்ச்
ஃபேன் ஃபேவரட் - 7 சீட்டர் டூ மிட் சைஸ் SUV வரை ..! புதுசா CNG ஆப்ஷனில் வரப்போகும் 5 கார்கள் - விலை, லாஞ்ச்
Trump Vs Jinping: 64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?
64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
Chennai Weather: மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
Chennai Weather:மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
Embed widget