மேலும் அறிய

Cinema headlines August 19 : லோகேஷ் கனகராஜ் நெக்ஸ்ட்... வேட்டையன் - கங்குவா கிளாஷ்... இன்றைய சினிமா செய்திகள்

Cinema Headlines August 19 :லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்டையன் வெளியாகும் அதே நாளின் கங்குவா வெளியாவதால் குழப்பத்தில் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் - அமீர்கான் கூட்டணி 

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 'வேட்டையன்' படத்தை இயக்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக 'கைதி 2 ' படத்தை இயக்க உள்ளார் என கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து ஒரு பான் இந்தியன் படம் ஒன்றை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்லால் உடல்நிலை :

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் மோகன்லால் நேற்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 64 வயதாகவும் மோகன்லாலுக்கு கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசை வலி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் கொச்சினில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாச தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார் என்றும் ஐந்து நாட்களுக்கு ரெஸ்டில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

வேட்டையன் - கங்குவா கிளாஷ் :

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியாகும் அதே நாளில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் வெளியாக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் சமீப காலமாக சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவான கங்குவா படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றளவும் ரஜினிகாந்த் படங்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு இருந்து வருகிறது. அதனுடன் போட்டியிட்டு வெளியாகும் போது கங்குவா படத்துக்கு கிடைக்கும் திரையரங்குகள் பாதியளவு குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம்  என கூறப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. 

சூரி நெக்ஸ்ட் :

நகைச்சுவை நடிகராக இருந்து வெற்றிமாறனின் 'விடுதலை' படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதை தொடர்ந்து சூரி நடித்த 'கருடன்' படமும் இந்த ஆண்டில் வெற்றி பெற்ற தமிழ் படங்களில் ஒன்றாகும். தொடர்ந்து பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை தொடர்ந்து லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் அடுத்ததாக இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Embed widget