மேலும் அறிய

ஜனநாயகன் படத்தில் கேமியோ! ரஜினி கமல் படத்தை இயக்காதது ஏன் ? ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்

கார்த்தியின் கைதி 2 படம் கைவிடப்பட்டதா ? ரஜினி கமல் படத்தில் இருந்து விலகியது ஏன் ? அல்லு அர்ஜூனின் புதிய படம் என அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்

கூலி படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இதில் அவர் தன் படங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். குறிப்பாக கார்த்தியின் கைதி 2 படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறித்தும் அவர் பேசியுள்ளார். 

கூலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எதற்கும் பெரிதாக ரியாக்‌ட் செய்யாமல் அமைதியாக இருந்து வந்தார் லோகேஷ். இதனிடையில் ஆமீர் கான் வைத்து அவர் இயக்கவிருந்த இரும்பு கை மாயாவி படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ரஜினி கமல் இணைய இருந்த படத்தில் இருந்து அவர் விலகினார். மேலும் கார்த்தியின் கைதி 2 திரைப்படமும் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் நாயகனாக நடித்து வரும் லோகேஷ் இன்னொரு பக்கம் தெலுங்கு உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனை வைத்து புதிய படத்தின் வேலைகளை தொடங்கினார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். 

கைதி 2 பற்றி லோகேஷ் கனகராஜ் 

" அதிக சம்பளம் கேட்டு தராததால்  கைதி 2 படம் கைவிடப்பட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.  அதே போல் எல்.சி.யு வும் நின்றுவிட்டதாக சொல்கிறார்கள். நான் தெளிவாக கூறிவிடுகிறேன். அல்லு அர்ஜூன் படத்திற்கு பின் நான் உடனடியாக கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறேன். அதன் பின் விக்ரம் 2 , ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்கவிருக்கிறேன். எல்.சி.யு வை முழுவதுமாக முடிக்காமல்  நான் செல்லமாட்டேன் . கூடிய விரைவில் எல்.சி.யு வெலைகள் தொடங்க இருக்கின்றன. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள பென்ஸ் படமும் எல்.சி.யுவின் ஒரு பாகமாக உருவாகியுள்ளது. 

ரஜினி கமல் படத்திலிருந்து விலகியது ஏன் ?

ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்திற்காக ஒன்றரை மாதம் தீவிரமாக பணியாற்றினேன். இரு நடிகர்களும் உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் தொடர்ச்சியாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருவதால் லைட்டாக ஒரு கதையை அவர்கள் விரும்பினார்கள். அதற்கு ஏற்ற நபர் நான் இல்லை என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். 

ஜனநாயகன் கேமியோ

"எச். வினோத் மற்றும் விஜய் அண்ணா என்னை ஒரு நாள் படப்பிடிப்பிற்கு அழைத்தார்கள். படத்தில் நான் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளேன். அவ்வளவு தான் என்னால் இப்போது சொல்ல முடியும் ."

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Ration Shop : மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
Embed widget