July 28 Movie Release: த்ரில்லர் முதல் ரொமான்டிக் படம் வரை.. இன்று தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
இன்று (ஜூலை 28) வெளியாக இருக்கும் பல்வேறு கதைகளத்தைக் கொண்ட பல்வேறு படங்கள். நீங்கள் எதைப் பார்க்க போகிறீர்கள்?
இன்று (ஜூலை 28) வெளியாக இருக்கும் பல்வேறு கதைக்களத்தைக் கொண்ட படங்கள் பற்றி நாம் காணலாம்.
டிடி ரிடர்ன்ஸ்
சந்தானம் நடிப்பில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘டிடி ரிடர்ன்ஸ்’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை மனிதர்களுடன் கேம் ஷோக்களை நாம் பார்த்திருப்போம் . தற்போது முதல் முறையாக பேய்களுடன் கேம் ஷோவை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
எல்.ஜி.எம்
கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் முதல் படம் எல்.ஜி.எம் என்கிற லெட்ஸ் கெட் மேரீட். ஹரிஷ் கல்யாண் , லவ் டுடே புகழ் இவானா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். காதலில் இருந்து திருமணம் என்கிற அடுத்த கட்டத்திற்கு நகரும்போது காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
லவ்
ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ். இந்தப் படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, பிக்பாஸ் டானி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் இரண்டும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
டை நோ சர்ஸ்
எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தன் டைனோசர்ஸ் (Die No Sirs) . ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிடுகிறது. போபோ சசி இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஜோன்ஸ் வி ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பீட்சா 3 - தி மம்மி
மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின், பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், கவிதா பாரதி, குரேஷி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பீட்சா 3: தி மம்மி”. அருண்ராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார். ஏற்கனவே பீட்சா படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதியும், 2ம் பாகத்தில் அசோக் செல்வனும் ஹீரோவாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறமுடைத்த கொம்பு
இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜாக்சன் ராஜ், அறிமுக இயக்குநரான இயக்கியுள்ள படம் ‘அறமுடைத்த கொம்பு’.முற்றிலும் புதுமுகங்களை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளை சர்வதேச படவிழாவில் வென்றுள்ள அறமுடைத்த கொம்பு திரைப்படம் தியேட்டரில் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாகிறது.
இதையும் படிங்க..