Leo: ”லியோவில் எந்த சீனும் கட் செய்ய மாட்டோம்” விஜய் ரசிகர்கள் படுகுஷி..!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 10ந் தேதி ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Leo: லியோ படம் எந்த காட்சிகளையும் கட் செய்யாமல் முழுவதுமாக இங்கிலாந்தில் ரிலீஸ் செய்யப்படும் என படத்தை விநியோகிக்கும் அஹிம்சா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய்யின் லியோ:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் லியோ இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த ‘நான் ரெடி தான்’ பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. நான் ரெடி தான் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
ஆனால், பாடலில் மது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட காட்சிகளும், பாடலின் வரிகளும் வன்முறையையும், போதை பழக்கத்தையும் தூண்டுவதாக கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த நான் ரெடி தான் பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாலக் கொண்டா சியர்ஸ் அடிக்க’ என்ற வரியும், ‘மில்லி உள்ள போனா கில்லி வெளில வருவான்டா’ என்ற வரியும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றிதழ்:
மேலும் இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் எந்த வித மாற்றமும் இன்றி, காட்சிகள் கட் செய்யாமல் லியோ படம் அப்படியே ஒளிபரப்பாகும் என விநியோகஸ்தர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லியோ படத்தை லண்டனில் விநியோகிக்கும் அஹிம்சா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனகராஜின் பார்வையில் எடுக்கப்பட்ட லியோ படத்துக்கு மதிப்பளித்து அதில் எந்த காட்சிகளும் கட் செய்யப்படாமல் இங்கிலாந்தில் ரிலீசாகும் என்றும், பார்வையாளர்களுக்கு நல்ல படத்தின் அனுபவத்தை கொடுக்க உள்ளதாலவும், உலகளவில் லியோ படம் பிரபலமானதும், 12ஏ சான்றிதழுடன் படம் திரையிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Out of respect for Lokesh Kanagaraj's vision, we're committing to NO CUTS for #LEO's UK release. Every frame is essential, and audiences deserve to experience it in its raw form. Once we feel the film has reached a wide audience, we'll switch to a 12A friendly version 🙌 pic.twitter.com/TJemUXVTwr
— Ahimsa Entertainment (@ahimsafilms) September 13, 2023
12ஏ என்றால் 12 வயதுக்குட்பட்ட சிறியவர்கள் திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்கப்படுவது. லியோ படத்தின் வரவேற்பை பொருத்தே சிறுவர்கள் பெற்றோருடன் சென்று திரையரங்கில் லியோ படத்தை பார்க்க அனுமதிக்கபடுவதற்கான 12ஏ சான்றிதழ் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல சர்ச்சைகள் இருந்தாலும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற லியோ திரைப்படத்தில் விஜய்யுடன், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.