மேலும் அறிய

Leo Third Single: விஜய் - த்ரிஷாவின் அன்பான குடும்பம்.. நாளை வெளியாகும் ‘லியோ’ மூன்றாவது பாடல்!

முன்னர் வெளியான இரண்டு பாடல்களும் ஹீரோயிசம் பொங்க விஜய்யை மையப்படுத்தி இருந்த நிலையில், இந்தப் பாடல் குடும்பப் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான அன்பெனும் பாடல் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது சிங்கிள்

வரும் அக்.19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் நிலையில், கோலிவுட் தற்போதே திருவிழாக் கோலம் பூண்டத் தொடங்கியுள்ளது.  நடிகர் விஜய் - லோகேஷ் இரண்டாம் முறை இணைந்துள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படம் பற்றிய தொடர் அப்டேட்கள், நேர்க்காணல்கள் என முழு வீச்சில் ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி தற்போது லியோ படம் பற்றிய சூப்பட் அப்டேட் வெளியாகியுள்ளது. நா ரெடி, Bad Ass என இரண்டு பாடல்கள் லியோ படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது மூன்றாவது பாடலான 'அன்பெனும்' பாடல் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வெளியான இரண்டு பாடல்களும் ஹீரோயிசம் பொங்க விஜய்யை மையப்படுத்தி இருந்த நிலையில், இந்தப் பாடல் குடும்பப் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  லியோ திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருப்பதாக தன் சமீபத்திய நேர்க்காணலில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் ஐ ஆம் ஸ்கேர்ட் எனும் பாடல் லியோ ஆல்பத்திலேயே தன் ஃபேவரைட் என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

அதேபோல், லியோ படத்தில் தன் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்தி பாடல் இன்ஸ்பிரேஷன்

தன் சமீபத்திய நேர்க்காணல்களில் படம் பற்றிய அப்டேட்களை லோகேஷ் அள்ளி வீசி வருகிறார். அதில் நா ரெடி பாடலை இந்தியில் அமிதாப் - ரஜினி நடித்த ஹம் படத்தில் இடம்பெற்ற ‘ஜூம்மா சும்மா’ பாடலை பார்த்து இன்ஸ்பயராகி எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வழக்கமாக 90களின் பிரபல பாடல்களை தன் படங்களில் மீண்டும் இடம்பெறச் செய்து வைப் செய்வதை லோகேஷ் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், மாஸ்டர் படத்தில் ‘கருத்த மச்சான்’, கைதி படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு’, விக்ரம் படத்தில் ‘சக்கு சக்கு வத்திக்குச்சு’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு பயணித்துள்ளார் லோகேஷ்!

லியோ பட ரிலீஸ் நாளில் விடியற்காலை, மற்றும் நள்ளிரவு காட்சிகள் என எதுவும் அனுமதிக்கப்படாத நிலையில், அக்.19ஆம் தேதிக்கு முன்பாக 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு பிரீமியர் காட்சிகள் ரசிகர்களுக்காக இருக்கலாம் என கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன. லியோ திரைப்படத்துக்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Embed widget