மேலும் அறிய

‘சிட்டுக்குறிஞ்சி’ இசை வெளியீட்டு விழா: நவம்பர் 27-ல் திரைக்கு வரும் புதிய படம்

இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் ஃபேண்டஸி காதல் கதையான சிட்டுக்குறிஞ்சி திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஃபேண்டஸி மற்றும் காதல் அம்சங்களுடன், இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களை இணைக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 27-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

விழாவில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த், நடிகர்கள் ரஜித் சிஆர், ஆதவன், ஜி.எம். குமார், நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், வெங்கடேஷ், வி.ஜே. பப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆர்.வி. உதயகுமார் பங்கேற்றார்.

படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். மாரா இசையமைத்துள்ள இப்படத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவும் பங்களித்துள்ளது. கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படத்தொகுப்பை மகேந்திரன் கணேசன் கவனித்துள்ளார்.

இயக்குநர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், தனது கல்லூரி நாட்களில் ‘இளங்கதிர்’ கையெழுத்துப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் சவால்கள் நிறைந்ததாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், படத்தின் வெற்றிக்கு ஊடகங்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகர் ஆதவன், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பைப் பாராட்டினார். 80 ஏக்கரில் கிராமம் அமைத்து படமாக்கிய முயற்சியையும், புடாபெஸ்ட் இசைக்குழுவின் பங்களிப்பையும் குறிப்பிட்ட அவர், புதிய கோணத்தில் உருவாகியுள்ள படத்தைத் திரையரங்குகளில் பார்க்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார் பேசுகையில், 1983 மற்றும் 2025 ஆகிய காலக்கட்டங்களுடன் தொடர்புடைய வகையில் கதை அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். வித்தியாசமான திரைக்கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மூத்த நடிகர் ஜி.எம். குமார், சிறிய திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டினார். சிறிய படங்களுக்கும் திரையரங்குகளில் உரிய வாய்ப்பும் காட்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தயாரிப்பாளர் ஜூட் ஆனந்த், படத்தை உருவாக்கும்போது எதிர்கொண்ட சிரமங்களையும், படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்குகளையும் நினைவுகூர்ந்து, குடும்பத்துடன் படம் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இசையமைப்பாளர் மாரா, புடாபெஸ்ட் இசைக்குழுவுடன் பணியாற்றியது அரிய வாய்ப்பு என்றார். மற்ற கலைஞர்களும் படத்தின் இசை, திரைக்கதை, பாடல்கள் மற்றும் தொழில்நுட்பப் பணிகளைப் பாராட்டினர். ‘சிட்டுக்குறிஞ்சி’ நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் ரசிகர்களின் ஆதரவைக் கோரியுள்ளனர்.

நடிகர் ராஜித், ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்றும், இசை மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறினார். ஸ்ரீராம் கார்த்திக், இயக்குநர் சொன்ன கதை தங்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார். நடன இயக்குநர் தீனா பாடல்களையும் கிளைமாக்ஸ் பாடலையும் பாராட்டினார். வி.ஜே. பப்பு, படத்தில் மலையாளத்தில் பேசி நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, அனைவரின் நடிப்பும் இயல்பாக இருக்கும் என்றார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

செல்ஃபீ எடுக்க வந்த ரசிகரை தரையில் தள்ளிய பவுன்சர்கள்...கல்லு மாதிரி உட்கார்ந்திருந்த தனுஷ்
செல்ஃபீ எடுக்க வந்த ரசிகரை தரையில் தள்ளிய பவுன்சர்கள்...கல்லு மாதிரி உட்கார்ந்திருந்த தனுஷ்
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு புது ஸ்கெட்ச்! டாக்டருடன் கூட்டு சேர்ந்த ஸ்ரேயா! கார்த்திகை தீபத்தில் புது ட்விஸ்ட்
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு புது ஸ்கெட்ச்! டாக்டருடன் கூட்டு சேர்ந்த ஸ்ரேயா! கார்த்திகை தீபத்தில் புது ட்விஸ்ட்
Jailer 2: இங்க நான்தான் கிங்..
Jailer 2: இங்க நான்தான் கிங்..". ஓடிடி-யிலும் சக்கைப் போடு போடும் ஜெயிலர் 2! குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிதான்!
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget