LEO Success Meet: விஜய் நான் கண்ணால் பார்த்த ஒரே லெஜெண்ட்.. பாத்ரூம்ல கூட லியோ அப்டேட் கேட்டாங்க.. மிஷ்கின் பேச்சு..!
LEO Success Meet: “நான் மைக்கேல் ஜாக்சன் மற்றும் புரூஸ் லீ என்னும் இரண்டு லேஜெண்ட்களை பற்றி படிச்சிருக்கேன்.. ஆனால், நான் கண்ணால் பார்த்த ஒரே லெஜெண்ட் விஜய் மட்டும் தான்” - மிஷ்கின்
லியோ வெற்றிவிழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களை ஈர்த்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்று வருகிறது.
சக்சஸ் மீட்
இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், சாண்டி, மடோனா செபஸ்டியன், மன்சூர் அலிகான், நெப்போலியன், வையாபுரி, விஜய்யின் அம்மா ஷோபா உள்ளிட்ட பலரும் உற்சாகமாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் வில்லன்களுள் ஒருவராக நடித்தவரும் பிரபல இயக்குநருமான மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். “25 வருஷமா எப்படி ஒரு மனுஷன் இப்படி மேக்னெட் மாதிரி அட்ராக்ட் பண்ணிட்டே இருக்க முடியும்? இந்த ஸ்டேஜ்ல இருக்க நான் ரொம்ப பெருமை பட்றேன்.
நான் கண்ணால் பார்த்த லெஜண்ட்
என்னை இங்கு 4 மணிக்கு வர சொன்னார்கள். நான் 4.30க்கு வந்தேன். ஆனால் விஜய் 2 மணிக்கே இங்கு வந்துவிட்டார். நான் நிறைய படங்களில் வேலை செஞ்சிருக்கேன். ஆனா சரியா 8 மணிக்கு மேக் அப் போட ஷார்ப்பா வரது விஜய் தான்.
நான் மைக்கேல் ஜாக்சன் மற்றும் புரூஸ் லீ என்னும் இரண்டு லேஜெண்ட்களை பற்றி படிச்சிருக்கேன்.. ஆனால், நான் கண்ணால் பார்த்த ஒரே லெஜெண்ட் விஜய் மட்டும் தான். ஏர்போர்ட் பாத்ரூமில் கூட என்கிட்ட லியோ அப்டேட் கேட்டாங்க. போன வருஷம் ஸ்வீடன் போனேன். அங்க இருக்கவங்க விஜய் என்ன சொன்னாருனு கேட்டாங்க.
விஜய் ஃபேன்ஸ் இத பண்ணி இருக்கமாட்டாங்க..
விஜய்யோட வெற்றி கொஞ்சம்கூட அதிர்ஷ்டம் இல்ல, முழுக்க முழுக்க கடின உழைப்பு மட்டும் தான் காரணம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நான் செத்ததா ஒரு போஸ்டர் அடிச்சாங்க. ஒரு விஜய் ஃபேன் நிச்சயம் இப்படி பண்ண மாட்டாங்க. ஏன்னா விஜய் கூட இருந்தா வாழ தான் முடியும். எப்படி சாக முடியும்?” எனப் பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமக வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி வசூலில் பெரிய அளவில் ஹிட்ட அடித்துள்ளது. இப்படம் வந்து 13 நாள்கள் கடந்துள்ள நிலையில், முன்னதாக ரூ.540 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு நேற்று (அக்டோபர் 31) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் படிக்க: LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. விஜய்யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..!