Leo : விஜய் படத்தில் கமல்ஹாசன் வசனம்.. கமலின் fanboy என நிரூபித்த லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் கமல்ஹாசன் படத்தின் வசனம் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது
![Leo : விஜய் படத்தில் கமல்ஹாசன் வசனம்.. கமலின் fanboy என நிரூபித்த லோகேஷ் கனகராஜ் leo director lokesh kanagaraj uses kamalhassan nammavar movie dialogue in leo movie Leo : விஜய் படத்தில் கமல்ஹாசன் வசனம்.. கமலின் fanboy என நிரூபித்த லோகேஷ் கனகராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/e202f90823c3fc65bc98e8637d86d92a1697789447886572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் , த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின் , அனுராக் கஷ்யப், மடோனா செபாஸ்டியன், அர்ஜுன், சஞ்சய் தத், ஜார்ஜ் குட்டி, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் திரைப்படம் லியோ. நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
எல்.சி.யு
வழக்கமாக லோகேஷ் கனகராஜின் படங்களில் இருக்கும் தனித்துவமான விஷயங்கள் லியோ படத்திலும் இடம்பெறுகின்றன. உதாரணமாக பழைய பாடகள் வருவது. ஏதோ ஒரு காடியில் ஏதோ ஒரு கமல் படத்தின் ரெஃபரன்ஸ் வருவதை சொல்லலாம். இவைத் தவிர்த்து பல்வேறு சின்ன சின்ன சர்ப்ரைஸ்கள் படத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில கைத்தட்டல்களை பெறுகின்றன. சில சரியாக பொருந்தவில்லை. லியோ படம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸின் இணைகிறதா என்கிற ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. மறுபுறம் லியோ திரைப்படம் வலுக்கட்டாயமாக எல்.சி யூவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதள விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
முதல் நாள் வசூல்
தோராயமாக 300 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள லியோ திரைப்படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவது ரூ 140 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 900 திரையரங்குகளில் வெளியான லியோ ரூ.30 கோடியும், கேரளாவில் ரூ.11 கோடி, கர்நாடகாவில் ரூ.14 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.15 கோடி, இந்தியில் ரூ. 4 கோடி இந்தியாவில் மட்டும் ரூ.74 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் வெளிநாடுகளில் முதல் நாளில் ரூ.66 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.
கமல் வசனம் பேசிய விஜய்
"ஓங்கி அறைஞ்சேன்னு வை சைடுல இருந்து பார்த்தாலும் நீ சிரிக்கிற மாதிரி இருக்கும்" இந்த டயலாக்க அண்ணன் பேசும்போது எங்கையோ கேட்ட மாதிரி இருந்துச்சு .
— மண்டகசாயம் (@kasaayam) October 19, 2023
@Dir_Lokesh மெய்யாலுமே நீ ஃபேன் பாய்ணா pic.twitter.com/gBT59IFyvt
சமூக வலைதளங்களில் லியோ படம் வைரலாகி வரும் நிலையில் படத்தில் நடிகர் விஜய் பேசிய ஒரு குறிப்பிட்ட வசனம் கமல் மற்றும் விஜய் ரசிகர்களை ஈர்த்துள்ளது. மிகத்தீவிர கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ் விஜயின் வாயால் கமல் படத்தின் வசனத்தை பேச வைத்திருக்கிறார். நம்மவர் படத்தில் “ஓங்கி அறைஞ்சா சைடுல இருந்து பாத்தாலும் சிரிக்கிற மாதிரி இருக்கும்“ என்கிற வசனத்தை கமல் பேசுவார்.
இதே வசனத்தை விஜய் லியோ படத்தில் ஒரு காட்சியில் பேசி இருக்கிறார். நேற்று படத்தை பார்த்து வந்த ரசிகர்கள் இன்று இணையதளத்தில் இந்த தகவலைப் பகிர்ந்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)