மேலும் அறிய

Lokesh Kanagaraj: லியோ தயாரிப்பாளரிடம் ஹெலிகாப்டர் கேட்ட லோகேஷ் கனகராஜ் - நடந்தது என்ன?

லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் தனது படங்களில் வசூலைக் குறித்து லோகேஷ் கனகராஜ கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தீவிரமாக ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து வரும் லோகேஷ் கனகராஜ் சினிமாவில் தன்னுடைய நோக்கம் தன்னுடைய ஆசைகள் என் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து  வருகிறார்.

வசூல் எனக்கு முக்கியமில்லை

லியோ திரைப்படம் உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவித்தபோது “ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியாகிறது. இன்று ஒரு படம் வெளியாகிறது என்றால் அதன் வசூலை அடுத்த வாரம் வரும் படம் முறியடிக்கும். அந்த படத்தை இன்னொரு படத்தின் வசூல் முறியடிக்கும்.  என்னுடையப் படங்களின் வசூலைப் பற்றி எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை.  நான் ஒரு படம் எடுக்கிறேன் என்றால் அந்த படம் உருவாவதற்கு தயாரிப்பாளர் என்னை நம்பி பணம் கொடுக்கிறார். அந்த பணத்தை அவருக்கு திருப்பி எடுத்துக் கொடுப்பது மட்டுமே என்னுடைய நோக்கம். 

அதை தவிர்த்து என்னுடையப்  படங்கள் எவ்வளவு வசூல் ஈட்டினாலும் அது என்னை பெரிதாக உற்சாகப் படுத்துவதில்லை. என்னைப் பொறுத்தவரை எனக்கு திரையரங்கத்தில் மக்கள் பார்த்து ரசிக்கும் படியான படங்கள் இயக்கப் பிடித்திருக்கிறது அது மட்டுமே என்னுடைய நோக்கம். என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் மற்றும் படத்தை நம்பி பார்க்க வரும் மக்கள் இவர்கள் இருவருக்கும் நியாயம் சேர்ப்பது தான் என்னுடைய ஒரே நோக்கம்.  படத்திற்கு போட்ட பணத்தை எடுத்து கொடுத்தப்பின் இவ்வளவு வசூல் ஈட்டித்தர வேண்டும் என்று எந்த ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்து போடவில்லை “ என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் வாங்கி குடுங்க

தொடர்ந்து பேசிய லோகேஷ் “ எனக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஒரு நகைச்சுவையான உரையாடல் நடந்தது. லலித் சார் என்னிடம் ”லோகேஷ் இணையதளத்தில் மீம்ஸ் எல்லாம் பார்த்தீர்களா..எப்படியாவது நம்ம 1000 கோடி வசூல் எடுத்தாக வேண்டும் “ என்று சொன்னார். நான் அவரிடம் நகைச்சுவையாக “ ஆமா சார் நீங்க கூட எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி தரதா மீம்ஸ் போட்டாங்க அத எல்லாம் பாத்தீங்களா. வாங்கி குடுத்திருங்க என்று சொன்னேன். “ 

லியோ

விஜய், த்ரிஷா, மிஸ்கின், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற அக்டோபம் 19 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக இருக்கிறது லியோ திரைப்படம்.

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget