மேலும் அறிய

Leo Day 6 Box Office: லியோ 6 நாளில் ரூ.450 கோடி வசூல்.. விடுமுறை ஓவர், இனியும் தாக்கு பிடிக்குமா விஜய்யின் மந்திரம்?

Leo Day 6 Box Office: விஜyயின் லியோ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் 6வது நாள் முடிவில் 450 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leo Day 6 Box Office: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான ஆறாவது நாளில், இந்தியாவில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ 6வது நாள் வசூல் நிலவரம்:

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம், முதல் 5 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆறாவது நாளில் லியோ திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 37 கோடி ரூபாயை வசுலித்துள்ளதாக sacnilk இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.21.5 கோடி, கேரளாவில் ரூ.5 கோடி,  கர்நாடகாவில் ரூ.3.5 கோடி, ஆந்திராவில் ரூ.3.5 கோடி மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ.3.5 கோடி என மொத்தம் 37 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனால், லியோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் 450 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனியும் தாக்குபிடிக்குமா?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருப்பினும் படத்தின் வசூல் குறைந்தபாடில்லை. படம் வெளியான பிறகு தொடர் விடுமுறை இருந்ததால், திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. இதனால், படத்தின் வசூலில் எந்த தாக்கமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிவடைந்த நிலையில், வேலைக்கு மற்றும் கல்வி நிலையங்களுக்கு செல்வது பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனால், இதற்கடுத்த நாட்களில் படத்தின் வசூல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

லியோ திரைப்படம்:

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலித்து, நடப்பாண்டில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற படமாக லியோ திரைப்படம் உருவானது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று படத்தின் வசூல் பாதியாக குறைந்த நிலையில், சனிக்கிழமை முதல் தொடர் விடுமுறை தொடங்கியதால் லியோ வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக மாறியுள்ளது.

முதல் 5 நாட்கள் வசூல் நிலவரம்:

sacnilk இணையதளத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் படி, லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் 64.8 கோடி வசூலித்துள்ளது. மேலும், இரண்டாவது நாளில் 35.25 கோடி ரூபாய், மூன்றாவது நாளில் 39.8 கோடி ரூபாய், நான்காவது நாளில் 41.55 கோடி ரூபாய் மற்றும் ஐந்தாவது நாளில் 35.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் முதல் ஆறு நாளில் 248.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget