மேலும் அறிய

Maniratnam:திடீரென மணிரத்னம் வீட்டுக்கு வந்த ‘கொரோனா பேட்ச்’ இயக்குநர்கள்.. ஷங்கர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு திடீரென தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பலரும் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தை இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநார்கள் திடீரென இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

1985 ஆம் ஆண்டு இதயகோயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். வயது தற்போது 67-ஐ கடந்து விட்ட நிலையில், தமிழ் சினிமாவின் ஐகானிக் இயக்குநராக உள்ளார். எந்த இயக்குநர் ஆனாலும் மணிரத்னம் படத்தில் இடம்பெற்ற மாதிரியான காதல் காட்சிகள் தங்கள் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைக்கும் அளவுக்கு மேக்கிங்கில் பின்னி விடுவார். 

ரஜினி, கமல், மோகன்லால், மாதவன், சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் என முன்னணி நடிகர் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் மணிரத்னம் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் கனவு காவியமாக கருதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கி சாதனை படைத்தார். ஏதோ தாங்களே ஜெயித்து விட்டதாக தமிழ் சினிமா இப்படத்தை கொண்டாடி தீர்த்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக மணிரத்னம் அறிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shankar Shanmugham (@shanmughamshankar)

இப்படியான நிலையில் இயக்குநர் மணிரத்னம் வீட்டுக்கு திடீரென தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பலரும் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தை இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சசி, லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

மேலும் அந்த பதிவில், “இந்த ஸ்பெஷலான மாலை நேர தருணத்துக்கு நன்றி மணி சார்! சிறந்த மற்றும் கொண்டாடப்படும் இந்த இயக்குநர்களுடன் பழகுவது, அவர்களுடன் நினைவுகளைப் பகிர்வது, மற்றும்  கார்த்திக் பாடிய சில எவர்கிரீன் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுக்கு வைப் செய்தது போன்ற தருணங்கள் தான் நான் சம்பாதித்த உண்மையான செல்வமாக உணர்கிறேன். உபசரிப்புக்கு மிக்க நன்றி சுஹாசினி” என தெரிவித்திருந்தார்.

இந்த இயக்குநர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கில் தான் ஒன்றிணைந்தார்கள். படப்பிடிப்பு எல்லாம் தடைப்பட்டிருந்த நிலையில் வாட்ஸ்அப் குரூப் மூலம் இணைந்துள்ளார்கள். அதில் உருவான நட்பு மணிரத்னம் வீட்டு சந்திப்பு வரை சுமூகமாக அழைத்து சென்றுள்ளது. மேலும் இந்த மீட்டிங்கில் வெற்றிமாறன், மிஷ்கின், சுதா கொங்கரா  போன்றவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget