Latha Rajinikanth : எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய கிஃப்ட் இது.. நெகிழ்ச்சியில் பூரித்த லதா ரஜினிகாந்த்
"அவர் எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய கிஃப்ட்" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவர் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு மிகவும் பொருத்தமானவர் நடிகர் ரஜினிகாந்த். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர். வயது வித்தியாசமின்றி அனைவரும் அவரின் படங்களை ரசிக்கிறார்கள். பலருக்கும் அவர் மீது தீராத காதலால் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு நடிகருக்கு மனதில் இத்தனை பெரிய இடத்தை கொடுப்பார்களா என வியக்கும் அளவிற்கு உலகளவில் ரசிகர்களை ரஜினி வெறியர்களை கொண்டவர்.
சிம்ப்ளிசிட்டி ஹீரோ :
போலித்தனம் இல்லாத அவரின் இயல்பான எளிமையான தோற்றம் நடவடிக்கைகள் இவற்றை பார்த்து பலரும் சிம்ப்ளிசிட்டி என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். யாரையும் குறை சொல்லாத மனம் கொண்ட இவர் சிறிய வயதினரானாலும் மனம் விட்டு பாராட்டும் அளவிற்கு பெருந்தன்மை கொண்டவர். தனக்கு பிடித்து விட்டால் அது படமாக இருந்தாலோ அல்லது நடிகராக இருந்தாலோ அல்லது ஒரு செயலாக இருந்தாலோ உடனே அதை பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே.
View this post on Instagram
சூப்பர் ஸ்டார் குறித்து அவர் மனைவி :
சூப்பர் ஸ்டாரை நேரில் ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா, பேசி விட மாட்டோமா, தொட்டு விட மாட்டோமா என ஏராளமானோர் ஏக்கத்தில் இருக்கும் போது அவருடன் வாழ்ந்து வரும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை பற்றி யாருக்காவது தெரிந்ததுண்டா? லதா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் குறித்து கூறுகையில், அவர் எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். பலரும் அவரை தொட்டு பேச வேண்டும் என ஏங்கும் ஒரு அபூர்வமான அற்புதமான இதயம் படைத்த ஒரு மனிதருடன் நாங்கள் தினமும் வாழ்வதையே பெரிய பாக்கியமாக கருதுகிறோம் என மிகவும் மன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் லதா ரஜினிகாந்த்.
#சூப்பர்ஸ்டார் பற்றி லதா #RajiniFlashback pic.twitter.com/VyHF1iGAYY
— Rajinifans.com (@rajinifans) November 28, 2022

