Puneeth Rajkumar : புனீத் ராஜ்குமாரை கௌரவிக்கும் கர்நாடக அரசு... சிறப்பு அழைப்பாக ரஜினி வருகை!
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கி கௌரவிக்கிறது கர்நாடக அரசு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு சிறப்பு அழைப்பு
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கி கௌரவிக்கிறது கர்நாடக அரசு. இந்த விழா இன்று மாலை விதான் சவுதாவில் நடைபெறவுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனீத் ராஜ்குமார். ரசிகர்கள் இவரை பவர் ஸ்டார் என கொண்டாடி வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு.
கர்நாடக அரசு வழங்கும் கௌரவம் :
49 வயதான நடிகர் அன்று அதிகாலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து கீழே விழும் வீடியோ வெளியாகி ரசிகர்களை நிலைகுலைய செய்தது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்த புனித் ராஜ்குமார் 2002ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான நாள் முதல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். ஒரு மனிதநேயம் உள்ள கோடை வள்ளலாக திகழ்ந்தவர். இந்த வலிமை வாய்ந்த நடிகரின் முதலாம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கி கௌரவிக்க உள்ளது கர்நாடக அரசு. இந்த விழா நவம்பர் 1ம் தேதியான இன்று விதான் சௌதா கர்நாடக சட்டசபையில் நடைபெறவுள்ளது.
Super Star #Rajinikanth & @tarak9999 garu will attend and honor beloved #PuneethRajKumar with Karnataka Ratna Award 👍#NTRajiniForAppu pic.twitter.com/f7nfPtAlkt
— Rajasekar (@sekartweets) November 1, 2022
சிறப்பு அழைப்பு :
இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் பங்கேற்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது மற்றும் இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை.
Actor #Rajinikanth lands in #Bengaluru. He will take part in the Karnataka Ratna award function to be conferred upon #PuneethRajkumar posthumously this evening. pic.twitter.com/RTKYbCN1vr
— Mahesh Chitnis (@Mahesh_Chitnis) November 1, 2022
அப்பா - மகன் பெற்ற கௌரவம் :
அரசு வழங்கும் இந்த கர்நாடக ரத்னா விருது இதற்கு முன்னர் கன்னட சூப்பர் ஸ்டார் மற்றும் புனித் ராஜ்குமாரின் தந்தையான ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு வழங்கப்படும் முதல் விருது இதுவாகும். கர்நாடக ரத்னா விருது, கன்னட திரையுலகில் சிறந்த சேவைக்காக வழங்கப்படும் ஒரு விருதாகும். இந்த விருதை பெரும் முதல் தந்தை - மகன் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.