45 Years Of mullum malarum : மகேந்திரன் படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகள்....45 ஆண்டுகளை நிறைவு செய்யும் முள்ளும் மலரும்
மகேந்திரன் இயக்கி ரஜினிகாந்த், சரத்பாபு, ஃபடாஃபட் ஜெயலக்ஷ்மி, ஷோபா, சரத்பாபு உள்ளிட்டவர்கள் நடித்த முள்ளும் மலரும் படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக மகேந்திரன் அறிமுகமாகிறார். உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலை அடிப்படையாக கொண்டு முள்ளும் மலரும் படத்தை இயக்கிநார் மகேந்திரன். பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற இயக்குநர்கள் எதார்த்த சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளங்களை கொண்டிருந்தபோதிலும் அவர்களிடம் இருந்து தனித்து நின்றார் மகேந்திரன் . முள்ளும் மலரும் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 45 வருடங்கள் நிறைவடைகின்றன.
முள்ளும் மலரும்:
வேற வேற தன்மைகளை உடைய இரண்டு விஷாயங்கள் ஒரே இடத்தில் இருக்கும் முரணையும் அதே நேரத்தில் அதன் அழகையும் உணர்த்துகிறது முள்ளும் மலரும் என்கிற டைட்டில். தனது சின்ன வயதில் இருந்து சொந்தமாக உழைத்து முன்னேறி தனது தங்கையுடன் வாழ்ந்து வருபவன் காளி (ரஜினி). யாருடைய தயவும் இல்லாமல் சொந்த உழைப்பால் வாழ்பவன் என்பதாலேயே காளிக்கு கர்வம் கொஞ்சம் அதிகம் தான். யாரிடமும் தேவையில்லாமல் பணிந்துபோவது அவனுக்கு பிடிக்காது. இப்படியான ஒருவருக்கு சூப்பர்வைஸராக வருகிறார் குமரன் (சரத்பாபு). ஆரம்பத்தில் இருந்தே இந்த இருவருக்கு இடையில் ஒத்துப்போவதில்லை. குமரனுக்கும் காளியில் மேல் ஒரு தவறான அபிப்பிராயமே உருவாகிறது. இவர்களுக்கு இடையிலான மோதல் ஒரு பக்கம் வளர்ந்துக் கொண்டிருக்கு மறுபக்கம் குமரனுக்கு காளியின் தங்கை வல்லிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஒருகட்டத்தில் தெரியாமல் நடந்த ஒரு தவறுக்காக காளியை வேலையை விட்வு தூக்குகிறார் குமரன், இதனைத் தொடர்ந்து தனது கைகளையும் விபத்தில் இழக்கிறான் காளி. தனது தங்கச்சியீன் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தும் அவள் சூப்பர்வைஸ்ரை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் வேறு ஒருவனுக்கு திருமனம் செய்ய திட்டமிடுகிறான் காளி. தன் வாழ்நாள் முழுவதும் தனது அன்னன் மீது உயிரையே வைத்திருந்த வல்லி தான் காதலித்த குமரனை திருமனம் செய்ய அவனுடன் செல்கிறார்.
மகேந்திரனின் முத்திரை க்ளைமேக்ஸ்
இதுவரை இந்தப் படம் ஒரு நல்ல எதார்த்தமான கதைக்கான அனுபவம் தான். ஆனால் படத்தின் கடைசி காட்சியில் தனது அன்னன் தான் முக்கியம் என்று தனது திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வல்லி வந்த பிறகு காளி பேசும் வசணம் காளியின் மனமாற்றத்தை மிகக் கச்சிதமாக உணர்த்தக் கூடியது. யாரிடமும் பனிந்து போகாமல் கர்வமாக வாழும் காளியை அவனது தங்கை வேறு என்ன செய்திருந்தாலும் காளியின் மனம் மாறியிருக்காது. ஆனால் தனது அன்னன் தான் முக்கியம் என்று அவள் திரும்பி வரும்போது காளியின் கர்வம் உச்சமடைகிறது . அவனிடம் ஒரு கை இல்லையென்றாலும் அவன் முழுமையடைந்தவனாக உணர்கிறான். அந்த முழுமை அவனுக்கு கொடுத்த மகிழ்ச்சியில் தனது தங்கையை தனக்கு பிடிக்காதவனாக இருந்தாலும் தனது தங்கைக்கு பிடித்திருப்பதால் சம்மதம் தெரிவிக்கிறான். முள்ளும் மலரும் படத்தின் க்ளைமேக்ஸ் ஒரு கதாபாத்திரம் சம்பிரதாயமாக இல்லாமல் எப்படி மனமாற்றம் அடைவதை சித்தரிக்க வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம்