மேலும் அறிய

சினிமாவில் சாதி பார்ப்பதில்லை...சண்முகபாண்டியன் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமாவில் சாதிய பாகுபாடு பார்த்து நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து நடிகர் சண்முகபாண்டியன் பத்திரிகையாளர்களிடம் பேசினார்

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன்  நடித்துள்ள கொம்புசீவி திரைப்படம் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது . இப்படத்தின் திரையரங்க வருகையின் போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் சண்முக பாண்டியன். அப்போது சினிமாவில் சாதி பார்த்து வாய்ப்பளிக்கப்படுவது குறித்து சாதியைப் பற்றிய படங்கள் குறித்தும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். 

கொம்புசீவி 

மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தைத் தொடர்ந்து அவரது  மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் செயல்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் நடிகராக தனக்கான பாதையை வகுத்து வருகிறார். கடந்த ஆண்டு படைத்தலைவன் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு அவர் நடித்த கொம்புசீவி படம் வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் , ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சண்முக பாண்டியன் பதிலளித்தார். 

தமிழ் சினிமா சாதி குறித்து சண்முக பாண்டியன் 

தமிழ் சினிமாவில் சாதிய அழுத்தம் இருக்கா  என்கிற பத்திரிகையாளரின் கேள்விக்கு சண்முகபாண்டியன் இப்படி கூறினார் " எனக்கு தெரிந்து அந்த மாதிரி எதுவும் இல்லை. நான் இதுவரை பார்த்த இடங்களில் அந்த மாதிரி இருந்ததில்லை. ஒரு நடிகருக்கு நல்ல திறமை இருக்கிறது என்றால் சாதி அல்லது மதத்தால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட முடியாது என்று நான் நினைக்கிறேன் " 

சாதியைப் பற்றிய படங்கள் குறித்து 

அண்மை காலங்களில் சாதியை வைத்து படங்கள் அதிகம் வெளிவருவது குறித்து பேசியபோது " எல்லா சாதி ரீதியிலான படங்களும் தேவைதான். இந்த சாதி மேல் இந்த சாதி கீழ் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்வதற்கு சாதியைப் பற்றிய படங்கள் தேவைதான் . இந்த மாதிரி ஒன்று நடக்கிறது என்பதை வெளியே சொன்னால் தான் அப்படி ஒன்று நடப்பதே வெளியே தெரிகிறது. அதனால் சாதி குறித்த படங்கள் வரவேண்டும் " என்று அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget