மேலும் அறிய

'பெத்லகேம்' ஹிட் கொடுத்த தெம்பு.. தென்னிந்தியாவைச் சூறையாட வரும் 2 பிரம்மாண்ட படங்கள்!

'பெத்லகேம் குடும்ப யூனிட்' வெற்றியைத் தொடர்ந்து 'பௌமா', 'டூக்ஸ்' படங்களை களமிறக்கும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்

பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும் அமல் நீரதின் ஆக்ஷன்-க்ரைம் டிராமா 'டூக்ஸ்' ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்

'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி விநியோக நிறுவனமான ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தனது அடுத்த முக்கிய திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. அட்வஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டரி-த்ரில்லர் திரைப்படமான 'பௌமா' (Bouma) மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்-க்ரைம் டிராமா திரைப்படமான 'டூக்ஸ்' (Deux) ஆகிய இரண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் மலையாளத் திரைப்படங்களின் தென்னிந்திய திரையரங்கு விநியோக உரிமையை இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.


பெத்லகேம்' ஹிட் கொடுத்த தெம்பு.. தென்னிந்தியாவைச் சூறையாட வரும் 2 பிரம்மாண்ட படங்கள்!

ஃபியூச்சர் ரன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அனூப் குமார் மற்றும் அருண் நாராயணன் ஆகியோர், ககைக்களத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தரமான திரைப்படங்களை பெருந்திரைக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களது நோக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து தென்னிந்தியப் பகுதிகள் மற்றும் பான்-இந்தியா (Pan-India) அளவிலும் விரிவடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த உன்னதமான விரிவாக்கத்தின் கீழ், ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தனது வலுவான விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, இத்திரைப்படங்களை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள பெருவாரியான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளது.

'பௌமா' திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகியப் பகுதிகளிலும்; 'டூக்ஸ்' திரைப்படம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகியப் பகுதிகளிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரெஜின் எஸ். பாபு எழுதி இயக்கியுள்ள 'பௌமா' திரைப்படத்தில் திலீஷ் போத்தன், சாகர் சூர்யா, வினீத் மற்றும் அதிதி பாலன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள பின்னணி இசை, இந்த த்ரில்லர் திரைப்படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பையும் மர்மத்தையும் சேர்க்கிறது. அமல் நீரத் இயக்கியுள்ள 'டூக்ஸ்' திரைப்படம், நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டொவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், ஷரஃபுதீன், ஸ்ரீநாத் பாசி மற்றும் ரஜிஷா விஜயன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன்-க்ரைம் கதையாக உருவாகியுள்ளது. இதற்கு உன்னி ஆர். வசனங்களை எழுத, கிறிஸ்டோ சேவியர் பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்துள்ளார்.

இதுகுறித்து அனூப் குமார் கூறுகையில், "பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்குப் பிறகு, அட்வஸ் ஃபிலிம்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த இரண்டு சிறந்த திரைப்படங்களை கேரளாவைத் தாண்டி பிற மாநில ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இயக்குநர் ரெஜின் எஸ். பாபு, சிறந்த நடிகர்கள் மற்றும் கிறிஸ்டோ சேவியரின் அசத்தலான இசையோடு 'பௌமா' என்ற ஒரு அசாத்தியமான மிஸ்டரி-த்ரில்லரை உருவாக்கியுள்ளார்.


பெத்லகேம்' ஹிட் கொடுத்த தெம்பு.. தென்னிந்தியாவைச் சூறையாட வரும் 2 பிரம்மாண்ட படங்கள்!

அதேபோல், அமல் நீரதின் 'டூக்ஸ்' திரைப்படம் பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் உயர்தர ஆக்ஷன்-க்ரைம் டிராமாவை திரையில் கொண்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள திரையரங்கு ரசிகர்களுக்கு இது ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்றார்.

இத்திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதிகள், ட்ரெய்லர் வெளியீடுகள் மற்றும் திரையரங்குகளின் முழுமையான பட்டியல்கள் ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வ விநியோக தளங்கள் மூலம் அறிவிக்கப்படும்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
Embed widget