மேலும் அறிய

Vijayakanth : என்னோட டேஸ்டுக்கு இவன் கார் ஒட்டுவானா... விஜயகாந்த் பற்றி மனம் திறந்த அவரது கார் டிரைவர்

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து அவரது கார் டிரைவர் வெங்கடேசன் விஜயகாந்த் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்

விஜயகாந்த்

தேமுதிக தலைவர்  நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறப்பு ஒட்டிமொத்த தமிழ் மக்களின் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . அரசியல் தலைவர்கள் , நடிகர்கள் , சாமானிய மக்கள் என அனைவரும் அவரது இறப்பை தங்களது நெருக்கமான ஒருவரின் இறப்பாகவே கருதினார்கள். விஜயகாந்த் குறித்த பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் நடிகர் விஜயகாந்திடம் கடந்த 30 வருடங்களாக கார் ஓட்டுநராக இருந்த வேங்கடேசன் விஜயகாந்த் பற்றிய பல புதிய தகவல்களை யூடியூப் சானல் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

என் டேஸ்டுக்கு இவன் கார் ஓட்டுவானா

விஜய்காந்திடம் தன்னை இப்ராஹிம் ராவுத்தர்தான் கார் ஓட்டுநராக வேலைக்கு சேர்த்துவிட்டார் என்றும் என்னுடைய டேஸ்டுக்கு இவன் கார் ஓட்டுவானா என்று விஜயகாந்த் ராவுத்தரிடம் கேட்டபோது “ உன்னோட டேஸ்ட் எனக்கு தெரியாதா விஜயகாந்த், அதெல்லாம் ஓட்டுவான் என்று அவர் கூறியுள்ளார்.

விஜய்காந்த் மீனாட்சித் திருவிளையாடல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரை அவசரமாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கொண்டு செல்ல என்னிடம் சொன்னார். நான் கார் ஓட்டுவது மட்டுமில்லாமல் மெக்கனிக் வேலையும் செய்தேன். அதனால் வேகமாக அவரை சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கொண்டு சென்றேன் . உடனே விஜயகாந்த் ராவுத்தருக்கு கால் செய்து யோவ் இவன் சூப்பர் பையன் யா.. நானே வெச்சிக்குறேன்’ என்று கூறினார்.”

” அதற்கு பிறகு 30 வருடங்கள் நான் அவரிடம் கார் ஓட்டியிருக்கிறேன் , ஒரு நாள் கூட அவர் என்னை டிரைவராக நடத்தியது கிடையாது எங்காவது வெளியே தங்கினால் கூட அவருடன் என்னையும் மெத்தையில் படுத்துக் கொள்ளச் சொல்வார். அவரிடம் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று ஒரு நாளும் நான் கேட்டது இல்லை, எனக்கு தேவையானதை எல்லாம் அவரே செய்து கொடுப்பார். “ 

விஜயகாந்தின் மதுபழக்கம் குறித்து பேசியபோது வெங்கடேசன் இப்படி கூறினார் “ விஜயகாந்துக்கு மதுபழக்கம் இருந்தது. யாருக்குதான் அது இல்லை, ஆனால் எல்லாரும் நினைப்பது போல் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விடவில்லை, அவர் தன்னை வருத்திக் கொண்டு சண்டைக் காட்சிகளில் நடிக்கக் கூடியவர். அவரைப் போல் யாராலும் நடிக்க சண்டைக் காட்சிகளில்  நடிக்க முடியாது.  கடுமையாக உடற்பயிற்சி செய்வார். என்னை அழைத்து என் நெற்றிக்கு நேராக காலை தூக்கி நிற்பார். அப்படி பயிற்சி செய்ததால் தான் அவரால் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடிந்தது. அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, என் சொந்த அண்ணனை இழந்துவிட்டேன் “ என்று அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget