Lal Salam: வேலூரில் லால் சலாம் கொண்டாட்டம்; மும்மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை
வேலூரில் மயிலாட்டம், ஒயிலாட்டம் டிரம்ஸ் வைப் செய்தும் கொண்டாட்டத்தில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இஸ்லாமிய தொப்பி அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
![Lal Salam: வேலூரில் லால் சலாம் கொண்டாட்டம்; மும்மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை Lal Salam Celebrations in Vellore Hindu Christian and Muslim Rajini Fans Pray in Muslim Caps - TNN Lal Salam: வேலூரில் லால் சலாம் கொண்டாட்டம்; மும்மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/454fb23b4bd72e35fa97ad3729fa5d441707458294905113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து, கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.
மொய்தீன் பாய் கதாபாத்திரம்
விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று காலை வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.
மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிறப்பாக ரஜினி பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் உணர்ச்சிகரம்
இதனிடையே, தன்னை முதன்முறையாக இயக்கியுள்ள தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் தன்னை ஐஸ்வர்யா வீல் சேரில் அமர்த்தி தள்ளிச் செல்லும் புகைப்படம் ஒன்றிணையும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
இந்து கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை
தமிழ்நாட்டில் ‘லால் சலாம்' திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று முதலே ரஜினிகாந்த் ரசிகர்களால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள அலங்கார திரையரங்கத்தில் ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர். பட்டாசுகள் வெடித்து, மயிலாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேளதாளத்துடன் நடத்தி ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் இறுதியாக தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணி உள்ளிட்டவைகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்.
மேலும் படிக்க: Lal Salaam: “மொய்தீன் பாய்” மட்டுமா..? ரஜினி இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய கேரக்டர்கள் என்னென்ன தெரியுமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)