Laal Singh Chaddha : ”படத்தின் வெற்றி தோல்வியை இவ்வளவு சீக்கிரம் தீர்மானிக்க வேண்டாம்” லால் சிங் சத்தா நடிகர் சொன்ன பதில்..
நடிகர் ஹாரி பர்மர் தனது திரைப்படமான ‘லால் சிங் சத்தா’ பாக்ஸ் ஆபிஸில் குறைந்த வியாபாரத்திற்குப் பிறகு, அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இன்னும் நேரம் தேவை என்று கூறிவுள்ளார். அமீர் கானின் படம் முதல் நாளில் சுமார் ₹10-11 மட்டுமே வசூலித்துள்ளது.
’லால் சிங் சத்தா’ எரிக் ரோத் மற்றும் அதுல் குல்கர்னியின் திரைக்கதையிலிருந்து அத்வைத் சந்தன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தி மொழி திரைப்படமாகும். அமீர் கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டது. இது 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான Forrest Gump இன் ரீமேக்காகும். இத்திரைப்படத்தில் கரீனா கபூர், நாக சைதன்யா மற்றும் அமீர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Receiving so much love for our Laal, our heart is full ❤️ Thank you very much! #LaalSinghChaddha in cinemas NOW! Book your tickets now - https://t.co/8Jdn1HCLmS#AamirKhan #KareenaKapoorKhan #MonaSingh @chay_akkineni @manavvij786 @atul_kulkarni #AdvaitChandan #KiranRao pic.twitter.com/b3G7onUieA
— Aamir Khan Productions (@AKPPL_Official) August 11, 2022
லால் சிங் சத்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் 11 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தில் கரீனாவின் காதலனாக நடித்துள்ள நடிகர் ஹாரி பர்மர் படத்தின் குறைந்த வியாபாரம் குறித்து கூறிவுள்ளார். “முதல் நாள் படத்தின் எதிர்காலத்தை கணிக்க முடியாது” என்று கூறினார்.
#LaalSinghChadha off to a double digit figures in box office... Are you enjoying watching the movie?#AamirKhan #KareenaKapoor #siddharthkannan #sidk pic.twitter.com/FRhpommQj2
— Siddharth Kannan (@sidkannan) August 12, 2022
அமீர் கான் நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றமளிக்கும் வகையில் துவங்கிய பிறகு, மக்கள் பொறுமையாக இருக்குமாறு நடிகர் ஹாரி பர்மர் வலியுறுத்தினார். வியாழன் அன்று வெளியான இப்படம் ரக்ஷா பந்தன் அன்று சுமார் ₹10 முதல் 11 கோடி வரை வசூலித்துள்ளது. அவர் கூறுகையில் “ஒரு நாள் வசூல் என்பது ஒரு படத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யாதுஎன்று தான் தற்போது என்னால் சொல்ல முடியும். வார இறுதி முடியட்டும். 15ஆம் தேதிக்கு (ஆகஸ்ட்) பிறகு ஒரு முடிவுக்கு வரலாம்” என்றார்.
A story full of emotions ❤️#LaalSinghChaddha in cinemas now.
— Viacom18 Studios (@Viacom18Studios) August 12, 2022
Book your tickets now- https://t.co/68tDVlD14U#AamirKhan #KareenaKapoorKhan #MonaSingh @chay_akkineni @manavvij786 pic.twitter.com/WL4rtkY8o4
“தயவுசெய்து ஒரு திரைப்படம் தயாரிப்பதற்குப் பின்னால் உள்ள முயற்சியைப் பாருங்கள். எல்.எஸ்.சி போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஆயிரம் மணிநேர படைப்பு செயல்முறையும், நிறைய பணமும் தேவை. நாம் அதை வீணாக்காமல் பார்த்துக்கொள்வோம். சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பாத்திரத்தில் உள்ள குறைகளை எளிதில் சுட்டிக் காட்டலாம். ஆனால் சமைப்பவர்கள் அந்த உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு அதன் பின்னால் இருக்கும் முயற்சியைப் பாராட்டுவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.