Kriti Sanon: 'எல்லா துறையிலும் நெப்போடிசம் இருக்கிறது..' - ’பரம சுந்தரி’ புகழ் க்ரித்தி சனோன் வேதனை
”நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும். திறமையை வெளிப்படுத்த மிமி போன்ற ஒரு திரைப்படம் தேவைப்படுகிறது” என்றார்.
![Kriti Sanon: 'எல்லா துறையிலும் நெப்போடிசம் இருக்கிறது..' - ’பரம சுந்தரி’ புகழ் க்ரித்தி சனோன் வேதனை Kriti Sanon Speaks About Nepotism People Used To Say I came in Tiger Shroff film Kriti Sanon: 'எல்லா துறையிலும் நெப்போடிசம் இருக்கிறது..' - ’பரம சுந்தரி’ புகழ் க்ரித்தி சனோன் வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/26/ec61ca7d6218230e9bb43b61e43300dc1677419019140574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் நடிகை க்ரித்தி சனோன்.
க்ரித்தி:
’நேனொக்கடினே’ எனும் தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சினிமா துறையில் கால் பதித்த க்ரித்தி, அதே ஆண்டு ’ஹீரோபன்தி’ படம் மூலம் டைகர் ஷ்ராஃபுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும் தடம் பதித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட டாப் ஸ்டார்கள் தொடங்கி, ஆயுஷ்மான் குரானா, கார்த்திக் ஆர்யன் ஆகியோருடன் நடித்து வெற்றிப்படங்களைத் தந்தாலும், மிமி படத்திலும் அதில் இடம்பெற்ற பரம சுந்தரி என்ற ஒற்றைப் பாடல் மூலமாகவும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஃபேமஸ் ஆகி லைக்ஸ் அள்ளினார்.
கடினமாக உழைத்தால் அதிர்ஷ்டம்:
இந்நிலையில், பாலிவுட்டில் நெப்போடிசம் குறித்து மனம் திறந்து க்ரித்தி சனோன் முன்னதாக நமது ஏபிபி செய்தி நிறுவனத்திடம் க்ரித்தி பேசியுள்ளார். ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாட்டில் பேசிய க்ரித்தி, முதல் படத்திலேயே வெற்றி பெறுவது அதிர்ஷ்டத்தால் தான் நடக்கும் என ஒப்புக்கொண்டார். மேலும், திறமை, கடின உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய மூன்று கூறுகளை வாழ்க்கையில் உறுதியாக நம்புவதாகவும் கூறிய க்ரித்தி, "நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும். திறமையை வெளிப்படுத்த மிமி போன்ற ஒரு திரைப்படம் தேவைப்படுகிறது” என்றார்.
பிரபலங்களின் பிள்ளைகள்:
தொடர்ந்து நெப்போடிசம் சர்ச்சை குறித்து பேசிய க்ரித்தி, நெப்போடிசம் எல்லா துறையிலும் இருக்கிறது. உண்மையில் இந்த வாதம் சினிமா குடும்பத்தைச் சேராதவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கிறதா என்பதைப் பற்றியது. என் முதல் படத்தின் போது ”“டைகர் ஷ்ராஃப் படத்தில் நடிப்பவர் வருகிறார்” என என்னைக் குறிப்பிட்டு மக்கள் விமான நிலையங்களில் பேசினார்கள். மக்கள் பாலிவுட் நட்சத்திரங்களின் பிள்ளைகளை முன்னதாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த க்ரித்தி, நான் திருமணத்தை நம்புகிறேன். ஒரு உறவு சரியென உணரும் தருணத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
”நடிகைகள் திருமணம் செய்து கொள்வது எவ்வளவு கடினம்?” என்ற கேள்விக்கு பதிலளித்த க்ரித்தி சனோன், என் சக நடிகைகளிடம் இருந்து கூட நான் இந்தக் கருத்தை கேள்விப்பட்டேன், என் தலைமுறையில் உள்ளவர்கள் கூட இப்படி நினைக்கிறார்கள் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?” என பதிலளித்தார்.
தற்போது தெலுங்கு, இந்தி உள்பட பான் இந்தியா படமாகத் தயாராகி வரும் ஆதி புருஷ் படத்தில் பிரபாஸூக்கு ஜோடியா க்ரித்தி நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)