மேலும் அறிய

Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்

Krish and Aish Youtube Channel: யூடியூபில் தம்பதியாக வீடியோ போட்டு பிரபலமாக உள்ள க்ரிஷ்-ஐஷ்வர்யா மீது, ஆபாசத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளதாகக் கூறி, கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில், சமூக ஊடகங்கள் என்பவை தவிர்க்க முடியாத சக்திகளாகிவிட்டன. அதன் மூலம் ஏற்பட்ட புரட்சியால் தற்போது ஆட்சியே மாறியுள்ளது. யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று பிரபலமாக உள்ள சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு பிரபலமானவர்களும் உள்ளனர். அந்த வகையில், தம்பதியாக வீடியோ போட்டு பிரபலமானவர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா. தற்போது, இவர்கள் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.

யூடியூபில் பிரபலமான கிருஷ் ஐஷ்வர்யா தம்பதி

இணையதளத்தில் பிரபலமாக உள்ள கிருஷ் ஐஷ்வர்யா(Krish and Aishwarya Raghu) தம்பதி, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன் சமூக வலைதளங்களில் வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு மற்றும் ஜோடிகளை மையமாகக் கொண்ட வீடியோக்களை வெளியிட்டு, மக்களின் கவனத்தை ஈர்த்தவர்கள். இவர்கள் @krishandaish என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் தங்கள் வீடியோக்களை பகிர்ந்து, தற்போது பிரபலமாக உள்ளனர். இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

கோவை சைபர் க்ரைமில் அளிக்கப்பட்ட புகார் என்ன.?

இந்த பிரபலமான யூடியூப் தம்பதி மீது, கோவையை சேர்ந்த வழக்கறிஞர் நவேஷ் ராஜ் என்பவர், கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கிருஷ் மற்றும் ஐஷ்வர்யா தம்பதி, அவர்களது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டள்ளதாகக் கூறி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

தனது புகார் மனுவில், கிருஷ், ஐஷ்வர்யா தம்பதி, சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர்கள் என்றும், இவர்கள் சமீபத்தில் நாட்டி அமெரிக்கா(Naughty America) என்ற பெயரில் ஆபாசமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர்களின் வீடியோக்களை 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளும் அதிகளவில் பார்ப்பதாகவும், அவர்களை திசை திருப்பும் வகையில் இவர்களது வீடியோக்களின் செயல்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவுவதால், தவறான வழி நடத்துதலாக அமையும் என்றும், இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2000, பிஎன்எஸ் சட்டம் 2023 பிரிவுகளின் கீழ், சிறுவர், சிறுமிகளை மிகவும் பாதிக்கும் என்பதால், தண்டனைக்குரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால், மேற்கூறிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம், அவர்கள் பதிவேற்றி வீடியோக்களை, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். அதோடு, அவர்களின் சமூகவலைதள கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளர். மேலும், இதுபோன்ற ஆபாசத்தை தூண்டும் வீடியோக்களை பதிவேற்றுவதன் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் வழக்கறிஞர் நவேஷ் ராஜ் கேட்டுள்ளார்.

சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் போலீஸார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலமாக உள்ள யூடியூப் தம்பதிகளான கிருஷ் ஐஷ்வர்யா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Embed widget