குழந்தை பிறக்காதுன்னு சாபம் விட்டாங்க! உடைந்த அழுத கேபிஒய் நவீன் மனைவி..!
விஜய்டிவி நவீன் மனைவி அழும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நவீன். வேறுவேறு பாடிலாங்குவேஜ்ஜில் இவர் செய்யும் மிமிக்ரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சீசனின் ஃபைனலில் நவீன்தான் டைட்டில் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் குரேஷி டைட்டிலை ஜெயித்தார். ஆனால் டைட்டில் கிடைக்காததால் நவீனின் வெற்றி ஒன்றும் பாதிக்கப்படவில்லை.
அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் தேடி வந்தன. திரைப்பட நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், வெளிநாடு கலை நிகழ்ச்சிகள் என பலவற்றில் கலந்து கொண்டார். வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நவீனின் வாழ்கையில் திடிரென்று அந்த சர்ச்சை வெடித்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவீனுக்கும், திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் நவீன் முதல் திருமணத்தை மறைத்து, மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து திவ்யா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், நவீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்துதான் நவீனுக்கு கிருஷ்ணகுமாரிக்கும் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்துதான் விஜய் டிவியில் ‘பாவம்ண்டா கணேசா’ தொடரில் நாயகனாக அறிமுகமானார். இந்த நிலையில் இவரின் மனைவி விஜய் டிவியில் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
‘வெற்றிநடை போடும் மதியமே’ நிகழ்ச்சியில் கர்ப்பிணியாக வந்த நவீனின் இரண்டாவது மனைவி, “ உனக்கு எல்லாம் பிள்ளையே பிறக்காது, நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவீங்க.. அப்படி நிறைய பேர் சொன்னாங்க. ஆனா இப்ப சொல்றேன் எந்த கஷ்டமும் என்னைய தாண்டிதான் இவர நெருங்க விடுவேன்” என்று பேசினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram