மேலும் அறிய

வயசாகிடுச்சு... கமெண்டுக்கு பிரபல நடிகை கொடுத்த அசத்தல் பதில்..!

முதிர்ச்சியாக தெரிவதாக வருத்தம் தெரிவித்த ரசிகருக்கு கொங்கொனா சென் ஷர்மா கொடுத்த பதிலுக்கு அவரது திரையுலக நண்பர்கள் பாராட்டு தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

இரண்டு தேசிய விருதுகள் வென்றதோடு திரையில் தனது நடிப்பால் பல இதயங்களையும் வென்று முப்பது வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இயங்கிவரும் பாலிவுட் நடிகை கொங்கோனா சென் ஷர்மா மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர், பேஜ் 3, லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா போன்ற படங்களில் நடிகையாக மாறுபட்ட கோணங்களை வெளிப்படுத்தினார். கடைசியாக அவர் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜீப் தஸ்தான்ஸ் என்னும் ஆந்தாலஜி தொடரில் கிலி புச்சி படத்தில் அவர் நடிப்புக்காக பாராட்டப்பட்டார். சீமா பஹ்வாவின் ராம்பிரசாத் கி டெர்வி படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது.

1983 இல் வெளியான இந்திரா படத்தில் குழந்தை கலைஞராக அறிமுகமான கொங்கோனாவுக்கு இது திரைத்துறையில் 38 ஆவது ஆண்டு. நடிகர், இயக்குநர் எழுத்தாளர் என பன்முகங்களுடன் திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இரண்டு தேசிய விருதுகள் மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல மதிப்புமிக்க பட்டங்களையும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெபிடா என்று பெயர்கொண்ட தனது செல்லப்பிராணி நாய்குட்டியுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் சில படங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் எழுதியிருந்தது, "இது மித்தாலி போர்ட் அண்ட் ட்ரெயினுக்கான பாராட்டு பதிவு! கடந்த லாக்டவுண் சமயத்தில் நான் இந்த அழகான நாய்குட்டியை தத்தெடுத்தேன், ஆனால் இது என் முதல் நாய், நான் அவளுக்கு சரியாக பயிற்சி அளிக்க முடியவில்லை. எனது பெபிடாவை இங்கு கழிப்பறை பயிற்சி, கட்டு பயிற்சி மற்றும் பொது நம்பிக்கையை வளர்ப்பதற்கான பயிற்சிகளுக்கு அனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி. மிதாலி சல்வி மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி. மேலும், என் பெபிடா எவ்வளவு வெகுளியாக இருக்கிறாள்." என்று.

வயசாகிடுச்சு... கமெண்டுக்கு பிரபல நடிகை கொடுத்த அசத்தல் பதில்..!

இந்த பதிவை பலரும் வரவேற்றாலும், கொங்கோனா சென்சார்மாவின் ரசிகர் ஒருவர் வித்தியாசமான கருத்தை தெரிவித்திருந்தார். அவரது வயதைக் கண்டு ஏமாற்றமடைந்த அந்த ரசிகர், அவரது திறமைக்கு திரைத்துறை நியாயம் செய்யவில்லை என்று கூறி அவர் பார்ப்பதற்கு வயதாகி இருப்பதை போல தெரிவதாக கருத்து தெரிவித்திருந்தார். அந்த ரசிகர் கருத்து பின்வருமாறு,

வயசாகிடுச்சு... கமெண்டுக்கு பிரபல நடிகை கொடுத்த அசத்தல் பதில்..!

"நீங்கள் வயதாகிவிட்டதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது, உங்களை போன்ற கலைஞர்களுக்கு திரைத்துறை நியாயம் செய்யவில்லை, பள்ளி வாழ்க்கையில் நீங்கள்தான் என் கனவு கன்னி, ஏக் தி தாயான் திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் அதே போல் காண விரும்பினேன்" என்ற பதிவுக்கு பதிலாக, "வருத்தப்பட வேண்டாம், இளம் வயதில் இறப்பதை விட வயதாவது ஒரு பாக்கியம்" என்று பதிவிட்டிருந்தார். அதற்கு கொங்கனாவின் திரைத்துறை நண்பர்கள் சோயா அக்தர், ஷிபாணி தந்தேக்கர், தாரா ஷர்மா போன்றோர் பாராட்டி பதிவிட்டிருந்தார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget