Aaroor Dass: தமிழ் திரையுலகின் பழம்பெரும் வசனகர்த்தா காலமானார்..! சோகத்தில் தமிழ் திரையுலகம்..
கோலிவுட்டில் இருபெரும் சிகரங்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் இருவருடனும் தனித்தனியே 28க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்து அவர்களுக்கு காலத்தால் அழியாத வசனங்களை எழுதியவர் ஆரூர் தாஸ்.
கோலிவுட்டின் பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் இன்று மாலை காலமானார். அவரது வயது 91.
கோலிவுட்டில் இருபெரும் சிகரங்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் இருவருடனும் தனித்தனியே 28க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்து அவர்களுக்கு காலத்தால் அழியாத வசனங்களை எழுதியவர் ஆரூர்தாஸ்.
பாசமலர், அன்பே வா:
View this post on Instagram
தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டாடப்படும் கிளாசிக் படங்களான பாசமலர், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், புதிய பறவை, தெய்வ மகன் எம். ஜி.ஆரின் வேட்டைக் காரன், அன்பே வா உள்ளிட்ட பல படங்களுக்கும் ஆரூர் தாஸ் வசனம் எழுதியுள்ளார்.
ஜெமினி கணேசன் நடித்த பெண் என்றால் பெண் என்ற படத்தை இவர் இயக்கியுமுள்ளார். திருவாரூரைச் சேர்ந்த இவர் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார். கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தன் இத்தனை ஆண்டு கால சினிமா பயணத்தில் வென்றுள்ளார்.
நாளை இறுதிச்சடங்கு:
இந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளின்போது ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸின் இல்லத்தில் நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: MS Bhaskar : "டேய்..பாஸ்கரா" என்று என்னை அன்போடு அழைத்த அக்குரல்.. வீடியோ வாயிலாக எம்.எஸ் பாஸ்கர் அஞ்சலி!