மேலும் அறிய

Mayilsamy Comedy: 'நினைத்தாலே சிரிப்பு வரும்..' மறக்க முடியாத மயில்சாமியின் கவனம் பெற்ற 10 காமெடிகள்..!

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் மயில்சாமியின் கவனம் பெற்ற சில திரைப்பட காட்சிகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த, மயில்சாமி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் நடித்து அதிகம் கவனம் பெற்ற சில நகைச்சுவை காட்சிகளை காணலாம்.

எல்.கே.ஜி:

எல்.கே.ஜி திரைப்படத்தில் வில்லனுக்கான பில்டப் சீனை பேசும்போது, ”எதிர்த்து நிக்குறது தோனிமா” என மயில்சாமி ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த காட்சியில் அது மாஸ் ஆகவே இருந்தாலும், நாளடைவில் அது பெரும் மீம் கண்டண்டாகவே மாறி வைரலானது.

தவசி:

தவசி திரைப்படத்தில் ஒரே காட்சியில் தோன்றி இருந்தாலும், ஒட்டுமொத்த ரசிகர்களையும் அநாயசமாக கவர்ந்து இருப்பார். போலி மாந்திரீக வாதியாக வந்து, வாயிலேயே நுழையாத படியான பல்வேறு வார்த்தைகளை கூறி, வடிவேலுவிற்கு விபூதி அடித்து பணத்தை சுருட்டும் காட்சிகள் மயில்சாமிக்கே உண்டான நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி இருக்கும்.

தூள்:

வடிவேலுவை போன்று விவேக்குடனும் சேர்ந்து பல படங்களில் விவேக் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தூள் படத்தில் விவேக்கை ஏமாற்றி பணத்தை பறிக்கும் மயில்சாமி, திருப்பதிக்கு சென்று வருவதாக கூறுவார். அப்போது பார்சலில் லட்டுவிற்கு பதிலாக ஜிலேபி இருக்க, அதை சமாளிப்பதற்காக “பாஸ் திருப்பதியில இப்ப லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்குறாங்கணு” அதகளம் செய்து இருப்பார்.

பாய்ஸ்:

பாய்ஸ் திரைப்படத்திலும் பாரில் வரும் ஒரே சீனில் நடித்து ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்கடித்து இருப்பார். நாயகன் மற்றும் அவரது நண்பர்களிடம், டைட்டில் பார்க்கில் வேலை செய்வதாக பொய் கூறி மது வாங்கி குடித்திருப்பார். அதோடு நாங்களே டிராப் செய்யலாமா என அவர்கள் கேட்கும் போது, ”அது அநாவசியம்” என மயில்சாமி கூறும் வசனம் பலரின் தவிர்க்க முடியாத பஞ்ச் ஆக மாறியுள்ளது.  

பாளையத்து அம்மன்:

பாளையத்து அம்மன் திரைப்படத்தில் மீண்டும் விவேக்குடன் சேர்ந்து டான்ஸ் சாமியாராக அசத்தினார் மயில்சாமி. அந்த படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்கள் இருவரும் விவாதிக்கும் காட்சிகள் பல போலி சாமியார்களின் முகத்தை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்தது.

உன்னை நினைத்து:

சூர்யா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில், திருமணமாக உள்ள இளைஞராக நடித்து இருந்தார். அதில் தான் அழகாக வேண்டும் என்பதற்காக தங்க பஸ்பம் லேகியத்தை வாங்கி உண்பதால், அவர் எதிர்கொள்ளும் விளைவுகள் வயிறு குலுங்க சிரிக்கை வைத்து, சிந்திக்கவும் வைத்தது.

என் புருஷன் குழந்தை மாதிரி:

என் புருஷன் குழந்தை மாதிரி திரைப்படத்தில் டாக்டர் குயில்சாமியாக தோன்றிய அவர், நோயாளிகளிடம் மாட்டி கொண்டு படாத பாடு பட்டிருப்பார். அந்த காட்சியில் வரும் ”நான் தான் இருக்கேன்ல” வசனம் இன்றளவும் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தலைநகரம்:

தலைநகரம் திரைப்படத்தில் புகைப்படக் கலைஞராக வந்த மயில்சாமி, வடிவேலை வைத்து ஃபோட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைத்து இருந்தார்.அதில் வரும் ”நீ நடிகன்டா” வசனமும் பல இளைஞர்களின் முக்கிய கவுண்டராகவும் மாறியுள்ளது.

சாணக்யா:

சாணக்யா திரைப்படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் கைகோர்த்து, ஒரு காமெடி காட்சியில் நடித்து இருந்தார். அதில், பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரு ஆட்டோவை பிளான் போட்டு மீட்டெடுக்கும் காட்சி வயிறு வலிக்க சிரிக்கை வைத்தது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget