மேலும் அறிய

Aishwarya Rajesh Visit Tirupati: போனை எங்கிட்ட கொடுங்க.. போலீஸ் போனை வாங்கி செல்ஃபி எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கனமிகுந்த கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், “ ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நல்ல தரிசனம். என்னுடைய மேனஜர் யுவராஜின் கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்தேன். அப்படியே சாமி தரிசனம் செய்யலாம் கோயிலுக்கு வந்தேன் ” என்று பேசினார்.

 

 

கோயில் வளாகத்தில் அவரை பார்த்த ரசிகர்கள், அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கிருந்த காவலரும் ஐஸ்வர்யா ராஜேஷூடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அவர் போட்டோ எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்த போதே, போனை வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

ஐஸ்வர்யா ராஜேஷின் கதை 


கோலிவுட் சினிமாவின் முக்கியமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற எளிமையான தோற்றத்தை கொண்டிருக்கு ஐஸ்வர்யாவின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம் என்றால் மிகையில்லை. சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் லோவர் மிடில்கிளாஸ் என்றே தன்னை அடையாளப்படுத்துகிறார். சென்னையில் ஹவுசிங் போர்ட் பகுதியில் பிறந்து வளந்த ஐஷ்வர்யாவின் தந்தை தெலுங்கு சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம்.

கலைத்தாகம் என்பது ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இயல்பாகவே ஊற்றெடுத்த ஒன்றாக இருந்தாலும் , ஐஸ்வர்யாவிற்கு 8 வயது இருக்கும்போது அவரது தந்தை ராஜேஷ் உயிரிழந்துவிட்டார். ஐஷ்வர்யா ராஜேஷிக்கு மூன்று அண்ணன்கள் உள்ள சூழலில் அனைவரின் படிப்பு மற்றும் உணவிற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார். மும்பைக்கு சென்று அங்குள்ள சந்தைகளில் புடவைகளை வாங்கி வந்து , சென்னையில் வீடு வீடாக விற்றுதான் தங்களை வளர்த்தாக தெரிவிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு பகுதி நேர எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் பணிபுரிந்திருக்கிறார். இன்றளவும் தனது எல்.ஐ,.சி பணியை தொடர்ந்து வருகிறாராம் ஐஸ்வர்யாவின் தாய்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

 

ஐஸ்வர்யா 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தனது அம்மாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே சூப்பர் மார்கெட்டில் வேலை செய்ய தொடங்கினாராம். அதன் பிறகு தொகுப்பாளராக சில பிறந்தநாள் விழாக்களில் வேலை செய்தாராம். அதன் பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வர , அதில் நடன திறமையை வெளிப்படுத்தி அங்கு வெற்றியாளராக மகுடம் சூட்டியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர்களும் இவர்களும் என்னும் திரைப்படத்தில் நடிகையாக களமிறங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து வாப்புகள்  தேடி  அலைந்திருக்கிறார் ஐஸ்வர்யா. தனது நிறம் , உடை , தோற்றம் போன்றவை மற்ற நடிகைகளில் இருந்து மாறுபட்டிருப்பதால் நான் புறக்கணிக்கப்பட்டேன் என மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார்.  தமிழ் பேசுவதால் கூட நிராகரிக்கப்பட்டதாக வருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷிடம், சில இயக்குநர்கள் நேரடியாகவே  ’நீங்கல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல ‘ என கூறியிருக்கின்றனர்.

இன்னும் சில இயக்குநர்களோ  காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க சொல்லி கேட்டார்களாம். ஆனால் அதனை மறுத்த ஐஸ்வர்யா தொடர்ந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க போராடியிருக்கிறார். மூன்று வருட  தொடர் போராட்டத்திற்கு பிறகு அட்டக்கத்தி படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிறிய ரோலாக இருந்தாலும் அந்த படத்தில் அவர் அங்கீகரிக்கப்பட்டார். அந்த படத்தை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் , ரம்மி உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நாயகியாக களமிறங்கியிருக்கிறார்.

ஆனாலும் பெரிதாக கண்டுக்கொள்ளப்படாத நடிகையாகவே இருந்த ஐஸ்வர்யாவின் திரையுலக வாழ்க்கையை மாற்றியமைத்த திரைப்படம் காக்கா முட்டை. நாயகியாக வேண்டும் என போராடிய ஐஸ்வர்யா, காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த துணிவே அவருக்கு வெகுவான பாராட்டையும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

அதன் பிறகு விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்த ஐஸ்வர்யா இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம் சினிமாக்களிலும் பிரபலம். சினிமாவில் முன்னேற எங்கிருந்து வருகிறோம் எந்த நிறத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. சினிமா மீதான ஆர்வமும் , உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு உதாரணம். 

 

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!
Thalapathy Vijay: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!
ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!
ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
TVK Vijay:”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
Senthil Balaji: கை விட்ட நீதிமன்றம்.! செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் போலீஸ்.? உச்சக்கட்ட பரபரப்பில் திமுக
கை விட்ட நீதிமன்றம்.! செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் போலீஸ்.? உச்சக்கட்ட பரபரப்பில் திமுக
Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!
Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!
Aarti: ’சுற்றி, சுற்றி ஆரத்தி எடுப்பது ஏன்?’ பின்னால் இருக்கும் ரகசியமும் அறிவியல் உண்மையும்..!
’சுற்றி, சுற்றி ஆரத்தி எடுப்பது ஏன்?’ பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்!
Embed widget