Koduva Movie: ‘கொடுவா’ படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் நிதின்சத்யா..
சென்னை-28 படத்தில் நடித்து பிரபலமான நடிகர் நிதின்சத்யா. தற்போது இவர் ‘கொடுவா’ படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்குகிறார்!
‘கொடுவா’ திரைப்படம்!
பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா”. இப்படத்தில் நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக மீண்டும் களமிறங்குகிறார். வசூல் ராஜா எம் பி பி எஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், சென்னை-28 படம் மூலம் பிரபலமானார். சின்ன ரோலாக இருந்தாலும் மக்களின் மனதில் பதியும் அளவிற்கு அழுத்தமுள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர், சத்தம் போடாதே படம் மூலம் சைக்கோ வில்லனாகவும் நடித்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். விக்ரம் பிரபு படத்தில் ப்ரேம் ஜீ கண்டிப்பாக இடம் பெறுவது போல, இவரும் இடம் பெருவார். இவர்களின் நட்பு, அஜித்துடன் இவர் நடத்த ஜீ படத்திற்கு முன்னாடியிருந்தே தொடங்கி விட்டது. இன்று கொடுவா படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தள்ளார். இந்த மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.
View this post on Instagram
எதார்த்தமான கதை:
ராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இப்படத்தில், அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை காண்பிக்கவுள்ளனர். மேலும், இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்வில் நடக்கும் எதிர்பாரத சம்பவங்களே இப்படத்தின் கதையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா கொடுவா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தில் ஹீரோயினாக பிக் பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்கிறார். இப்படத்தில், ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பல நடசத்திரங்கள் நடிக்கின்றனர். தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் 'ஐங்கரன்' கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் M செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.