மேலும் அறிய

Thalaivar 171 : தலைவர் 171 படத்தில் ரஜினியின் ஜோடி யார் தெரியுமா? 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் 'தளபதி' நடிகை...

Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' படத்தில் அவரின் ஜோடியாக யார் இணைய போகிறார் என்ற தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் என்றுமே சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பம்பரம் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தன்னை எப்போதுமே பிஸியாக வைத்துக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கேற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதில் அதே கெத்துடன் கலக்கி வருகிறார். 

Thalaivar 171 : தலைவர் 171 படத்தில் ரஜினியின் ஜோடி யார் தெரியுமா? 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் 'தளபதி' நடிகை...

கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்'  திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் ரஜினிகாந்துக்கு அது ஒரு சிறந்த கம்பேக் படமாக அமைந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். 

தற்போது 'ஜெய்பீம்' புகழ் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அதிரகபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜெயிலர் படத்தை போலவே 'வேட்டையன்' படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. 

'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். தலைவர் 171 படத்தின் திரைக்கதையை எழுதுவதற்காக லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் படப்பிடிப்பை சில மாதங்கள் ஒத்தி வைத்து இருந்தார்.  தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. என்றுமே படங்களை மாஸாக கொடுக்கும் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை இயக்குகிறார் என்றால் அப்படம் நிச்சயம் மாஸாக தான் இருக்கும். படத்தின் டீசரும் தெறிக்க விடும் வகையில் இருக்கும் என்பதால் அதை காண மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Thalaivar 171 : தலைவர் 171 படத்தில் ரஜினியின் ஜோடி யார் தெரியுமா? 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் 'தளபதி' நடிகை...

எதிர்பார்ப்பு எகிறி வரும் இந்நிலையில் தலைவர் 171 படம் குறித்த சில தகவல்கள் வெளியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தின் வில்லனாக நடிப்பதற்காக பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் அணுகப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு புதிய அப்டேட்டாக சிவா, தளபதி உள்ளிட்ட படங்களில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா மீண்டும் தலைவர் 171 படத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாகிறார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget