மேலும் அறிய

King of Kotha Teaser: இங்க நான் சொல்றதுதான் பகல்... நான் சொல்றதுதான் ராத்திரி... மாஸ் காட்டும் துல்கர்.. கிங் ஆஃப் கோதா டீசர்!

துல்கர் சல்மானுடன் நடிகர் பிரசன்னா,  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, டான்சிங் ரோஸ் ஷபீர், செம்பன் வினோத், நைலா உஷா அனிகா சுரேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

பிரபல நடிகர் துல்கர் சல்மான் கேங்ஸ்டராக நடித்துள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தன் தாய் மொழியான மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி என மாறுபட்ட கதாபாத்திரங்களில் மாஸ் காண்பித்து நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளவர் நடிகர் துல்கர் சல்மான்.

துல்கரின் ஆக்‌ஷன் விருந்து

அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்து தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டுள்ள துல்கர் சல்மான்  பொதுவாக சாக்லேட் பாயாகவே ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துல்கர் ‘கிங் ஆஃப் கோதா’ படம் மூலம் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் பீரியட் கேங்ஸ்டர் திரைப்படமாக  இப்படம் உருவாகியுள்ளது.

பிரபல மலையாள இசையமைப்பாளர்கள் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிகர் பிரசன்னா,  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, டான்சிங் ரோஸ் ஷபீர், செம்பன் வினோத், நைலா உஷா, அனிகா சுரேந்திரன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

வெளியான டீசர்

இப்படத்தின் டீசர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று மாலை இப்படத்தின் டீசர் வெளியாகி  சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

“இது காந்தி கிராமம் இல்ல, கோதா... இங்க நான் சொல்றது தான் பகல், நான் சொல்றது தான் ராத்திரி” எனும் துல்கரின் வசனங்கள் இந்த டீசரில் மாஸாக அமைந்து கவனமீர்த்துள்ளன. மேலும் பீரியட் கேங்க்ஸ்டர் கதாபாத்திரங்களாக அனைத்து நட்சத்திரங்களும் ரெட்ரோ லுக்கி மாஸ் காண்பித்துள்ள நிலையில், இந்த டீசர் வரவேற்பைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.

கதாபாத்திரங்களின் பெயர்கள்

முன்னதாக இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சார்பட்டா படத்தில் டான்ஸின் ரோஸாக கலக்கி இதயங்களை வென்ற மலையாள நடிகர் ஷபீர், இப்படத்தில் கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் கோலிவுட் நடிகர் பிரசன்னா ஷாகுல் ஹாசன் எனும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் வில்லனாகக் களமிறங்கியுள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தாரா எனும் கதாபாத்திரத்திலும், நைலா உஷா மஜ்னு எனும் கதாபாத்திரத்திலும், செம்பன் வினோத் ரஞ்சித் எனும் கதாபாத்திரத்திலும், அனிகா சுரேந்திரன் ரித்து எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த கதாபாத்திர அறிமுக வீடியோவில் துல்கரின் கதாபாத்திரப் பெயர் வெளியிடப்படாத நிலையில், டீசரிலும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் மேலும் சில அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget