இளம்பெண் கர்ப்பம்.. பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை.. யார் அந்த அரசியல் பிரபலம் தெரியுமா?
கேரளாவில் இளம் நடிகைக்கு எம்எல்ஏ ஒருவர் அறுவறுக்கத்தக்க மெசேஜ் அனுப்பி அத்துமீறிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த நடிகை ரினி ஜார்ஜ், பத்திரிகையாளர், டிவி தொகுப்பாளர், மாடல், டான்சர் என பன்முகத் தன்மை கொண்டவர். இந்நிலையில் ரினி ஜார்ஜ் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறிய குற்றச்சாட்டு, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம் எம்எல்ஏ தனக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதையறிந்த பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை கட்டம் கட்டி அடிக்க தொடங்கிவிட்டனர்.
நடிகைக்கு பாலியல் தொல்லை
ரினி ஜார்ஜ் அளித்த பேட்டியில், சமூகவலைதளம் மூலம் அந்த இளம் தலைவரும் எம்எல்ஏ-வுமான ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த அரசியல் பிரமுகர் தனக்கு அடிக்கடி தவறான எண்ணத்தோடு ஆபாச மெசேஜ் அனுப்பினார். கடந்த மூன்று ஆண்டுகளாக அத்துமீறலில் ஈடுபடும் வகையில் பேசி வருவதாகவும் வேதனயுடன் தெரிவித்தார். மேலும், திடீரென ஒருநாள் அந்த எம்எல்ஏ, கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், அங்கு தன்னை பார்க்க வருமாறும் வற்புறுத்தினார். அவர் இதுபோன்று பல பெண்களைத் தவறான எண்ணத்துடன் அணுகியுள்ளார் என்றும் ரினி ஜார்ஜ் கூறியிருப்பது கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இளம்பெண்ணுக்கு அரசியல் பிரமுகர் மிரட்டல்
நடிகை ரினி ஜார்ஜ் கூறிய பிரமுகர் வேறு யாரும் இல்லை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அதைத்தொடர்ந்து பாலக்காடு சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த ராகுல் மாங்கூட்டத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது. இவர் மீது பெண்கள் தொடர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், இளம்பெண்ணைக் கர்ப்பிணியாக்கிவிட்டு, கருவைக் கலைக்கும்படி ராகுல் மாங்கூட்டத்தில் வற்புறுத்தியதாக வழக்கறிஞர் ஷின்றோ செபாஸ்டின் என்பவர் அளித்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஒரு இளம் நடிகையிடம் கருவைக் கலைக்கும்படி ராகுல் மாங்கூட்டத்தில் வற்புறுத்தும் ஆடியோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
ராகுல் மாங்கூட்டத்தில் ராஜினாமா
தன்மீது யாரும் சட்டரீதியாக புகார் அளிக்கவில்லை என கூறி வந்த ராகுல் மாங்கூட்டத்தில், தற்போது தனது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, நான் குற்றம் செய்ததால் ராஜினாமா செய்யவில்லை. என்னை ராஜினாமா செய்ய யாரும் வற்புறுத்தவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் செயல்களை மதித்து நான் ராஜினாமா செய்கிறேன். புகார் கூறிய இளம் நடிகை என்னுடைய தோழிதான். அவர் எனக்கு எதிராகக் புகார் தெரிவித்ததாக எனக்கு தெரியவில்லை என்று ராகுல் மாங்கூட்டத்தில் தெரிவித்தார்.






















