Vijay: விஜயைப் பார்த்தாலே துள்ளுவான்... உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக சென்னைக்கு வந்த குடும்பம்: ஏன்?
பெருமூலை வாதம் பாதிக்கப்பட்ட தனது மகனின் ஆசையை நிறைவேற்ற அச்சிறுவனின் பெற்றோர்கள் நடிகர் விஜயை பார்க்க கேரளாவில் இருந்து சென்னை வந்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது
விஜய்
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் விஜய் இன்னும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். விஜய் சினிமாவை விட்டு விலகினால் அது தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்பது தான் அனைவரது கருத்தாகவும் இருக்கிறது. ரஜினி , கமல் , அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஒருபக்கம் இருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு ஸ்டார் என்றால் விஜய் தான் . தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா , ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் ஆயிரக் கணக்கான விஜய் ரசிகர்கள் உள்ளார்கள். விஜய் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மீதும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
மகனை அழைத்து சென்னை வந்த தம்பதி
தி கோட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் கேரளா சென்றிருந்தார். அப்போது அவர் அவரைப் பார்க்க வந்திருந்த பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை கட்டி அனைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது . தற்போது அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்ற அவனது பெற்றோர்கள் கேரளாவில் இருந்து சென்னை புறப்பட்டு வந்துள்ளார்கள். இது குறித்து அவர் தெரிவித்தபோது “ கேரளாவில் விஜய் சார் என் பையனை கட்டிபிடித்ததும் அவன் ரொம்ப சந்தோஷமாகிட்டான். அதன் பிறகு அவர எப்போ டி.வியில பார்த்தாலே துள்ளுவான், விஜய் பாட்டை கேட்டாலே குஷியாகி டான்ஸ் ஆடுவான். அவனால் முடியாது என்றாலும் விஜய் பாட்டைக் கேட்டால் அவன் ஆடத் தொடங்குவான். விஜய் என் பையனைப் பார்த்தபோது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் நாங்கள் என் மகன் பெயரில் இன்ஸாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கினோம். அதில் விஜய் பாடல்களுக்கு அவன் டான்ஸ் ஆடும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எங்களைத் தவிர அவர் யாரையும் கட்டிப்பிடித்தது கிடையாது. ஆனால் விஜய் சாரை பார்த்ததும் அவனாக போய் கட்டிபிடித்தான்.விஜய் சாரை பார்ப்பதற்கு முன்பு அவனுக்கு டான்ஸ் மீது ஆர்வம் இருக்கிறது என்பதே எங்களுக்கு தெரியாது’ என்று அவர்கள் தெரிவித்தார்கள்