Revolver Rita Review : திருமணத்திற்கு பின் மீண்டும் திரையில் கீர்த்தி சுரேஷ்...ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம்
Revolver Rita Movie Review : கீர்த்தி சுரேஷ் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்

ஜேகே சந்த்ரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டா. ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்ட்ராயன், சூப்பர் சுப்பராயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரைம் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரிவால்வர் ரீட்டா படத்தைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம்
'பெண்களை மட்டுமே கொண்ட ஒரு குடும்பத்தில் நெருக்கமான ஒருவர் உயிரிழக்கிறார். இந்த இறப்புக்கு காரணமான இரண்டு கேங்ஸ்டர் கும்பலையும் ஒரு போலீஸையும் பழிவாங்க அந்த குடும்பம் முடிவு செய்கிறது. நகைச்சுவை கலந்த இந்த காமெடி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு தீணி போடும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் சிங்கிள் டேக்கில் அவர் வசனம் பேசும் காட்சி சிறப்பாக வந்துள்ளது. ராதிகாவின் நகைச்சுவை காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. முதல் பாதி முழுவதும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த நேரம் எடுத்துகொள்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் இருந்து கதை தொடங்குகிறது. படத்தில் அங்கங்கு சில நகைச்சுவை காட்சிகள் நன்றாகவே வர்க் ஆகின்றன என்றாலும் இன்னும் சில நல்ல காமெடியன்கள் படத்தில் இருந்திருக்கலாம். வில்லன் கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் சீரியஸாக கையாண்டிருக்கலாம். ரிவால்வர் ரீட்டா ரொம்ப மோசமென்றும் சொல்லமுடியாத பொழுதுபோக்கிற்காக பார்க்க கூடிய ஒரு படம் " என பிரபல விமர்சகர் படத்தைப் பற்றி கூறியுள்ளார்
.@KeerthyOfficial ‘s #RevolverRita is a quirky dark comedy when an all women family unexpectedly ruffles with two faction of gangsters, a corrupted cop only to avenge the death of their dear one from the past.
— Rajasekar (@sekartweets) November 28, 2025
Keerthy has some well etched scenes especially the single take… pic.twitter.com/xh47Qtzr7j





















