Ashok Selvan: காதல் கணவர் அசோக் செல்வனுக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து.. லைக்ஸ் அள்ளும் கீர்த்தியின் பதிவு!
Ashok Selvan : இன்று பிறந்தநாள் கொண்டாடும் அசோக் செல்வனுக்கு அழகான இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் காதலுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அவரின் மனைவி கீர்த்தி பாண்டியன்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ச்சியாக தெகிடி, பீட்சா II: வில்லா, முப்பரிமாணம், கூட்டத்தில் ஒருவன், ஆரஞ்சு மிட்டாய், ஓ மை கடவுளே என ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்.
சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம். 'போர் தொழில்'. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
காதல் திருமணம் :
நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்களது பண்ணை வீட்டில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இந்தப் படத்தினை ஜெய் இயக்கி வருகிறார்.
சீறிய அசோக் செல்வன் :
பரஸ்பரம் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருப்பவரும் வெளிப்படையாக அன்பை பரிமாறிக் கொள்ள புகைச்சல் கொண்ட கும்பல் ஒன்று தேவையில்லாமல் கீர்த்தி பாண்டியனின் தோற்றத்தை பற்றி மோசமான பதிவுகளை இணையத்தில் பகிர, என்றும் அமைதியின் சொரூபமாக இருக்கும் அசோக் செல்வனுக்கே கோபம் தலைக்கு மேல் ஏறி சீற்றம் கொள்ள வைத்தது. அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் " உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் இருக்கிறேன்" என கூறி திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
கீர்த்தி பாண்டியனின் வாழ்த்து :
இந்நிலையில், தன்னுடைய அன்பு கணவர் அசோக் செல்வனின் பிறந்தநாளுக்கு மனைவி கீர்த்தி பாண்டியன் அழகான போஸ்ட் ஒன்றை அவர்களின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். "பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே! என வாழ்க்கையில் எனக்கு கிடைத்த சிறந்த விஷயம் நீங்கள். உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையிலும் சிறந்ததைக் கொண்டு வருகிறது.
உங்கள் பெரிய இதயத்திற்கு, நீங்கள் எல்லாவற்றையும் மிகுதியாகப் பெறுவீர்கள். ஐ லவ் யூ என அன்பே!" என ரொமான்டிக் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். அவரின் இந்த போஸ்ட் லைக்ஸ்களையும் கமெண்ட் களையும் குவித்து வருகிறது.
திரைப்பிரபலங்கள் பலரும் அசோக் செல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.