Thamizha Thamizha: ‘தமிழா.. தமிழா.’ நிகழ்ச்சியில் இருந்து கரு.பழனியப்பன் திடீர் விலகல் - ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி
Thamizha Thamizha Show: பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியான ‘தமிழா.. தமிழா.’ வில் இருந்து விலகுவதாக கரு.பழனியப்பன் அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபல விவாதா நிகழ்ச்சியான ‘தமிழா.. தமிழா.’ -வில் இருந்து விலகுவதாக நடிகரும், இயக்குநருமான கரு. பழனியப்பன் அறிவித்துள்ளார்.
தமிழா.. தமிழா:
மக்கள் பேசத் தயங்கும் விசயங்களை பேச வைப்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று அதை தொகுத்து வழங்கிய கரு. பழனியப்பன் ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை எடுத்துக் கொண்டு மக்கள் பேசுவதும் அதன் வழக்கம்.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்த கரு.பழனியப்பன் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.
கரு பழனியப்பன் டிவிட்டர் விவரம்
ஜீ தமிழ் உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! ..... நன்றி! @ZeeTamil @sijuprabhakaran ...
ஃபேஸ்புக் பதிவில் “ வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் பிரபலமான நிகழ்ச்சியை விட்டு இவர் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.
திரைப்பயணம்
கரு.பழனியப்பன் 2003-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ஸ்ரீகாந்த் - சினேகா நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தை இயக்கிவர் இவர்தான். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் இடையே நல்லா வரவேற்பு கிடைத்தது. மாநில அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதினையும் பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக பெற்றார். விஷாலை வைத்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானர். மந்திர புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானர். புள்ள குட்டிகாரன்,துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவருக்கு சதுரங்கம் திரைப்படத்திற்காக மாநில அரசின் சிறந்த கதை ஆசிரியர் விருதினைப் பெற்றார்.
மேலும் வாசிக்க..
Tech: சைபர் அட்டாக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதையெல்லாம் இனிமே ஃபாலோ பண்ணுங்க..!
Watch Video: காட்டு யானைகளுக்கே கொம்பன்... ஓய்வு பெற்றது கலீல் கும்கி யானை - சல்யூட் அடித்த வனத்துறை