மேலும் அறிய
Advertisement

Viruman | முத்தையா இயக்கத்தில் அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கர்..!
நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள புது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

விருமன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில், ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் சுல்தான். தற்போது, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் அவர், வல்லவராயன் வந்தியத்தேவன் என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கார்த்தியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. கொம்பன் படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படம் சூப்பர் ஹிட்டான நிலையில், இந்த படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. மேலும் இதில் நாயகியாக ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
#NewProfilePic pic.twitter.com/Pd7y9J8Ssr
— Aditi Shankar (@AditiShankarofl) September 5, 2021
பொதுவாக கார்த்தி தான் நடித்த இயக்குநர்களின் இரண்டாவது படத்தில் நடித்திருக்க மாட்டார். காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில்தான் மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைந்து இருக்கிறார். அந்த வரிசையில் தற்போது புதிதாகக் கொம்பன் பட இயக்குநர் முத்தையா இணைந்து இருக்கிறார். விருமன் என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா தனது 2D என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Happy to present to you our next Production with the talented @dir_muthaiya starring our Kadaikkutti Singam @Karthi_Offl titled #Viruman 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 5, 2021
A @thisisysr musical 🎶
A summer 2022 release 🎥@Suriya_offl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial @AditiShankarofl pic.twitter.com/1Z8AgSMSZr
மேலும் விருமன் என பட தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் போஸ்டரையும் நடிகர் சூர்யா வெளியிட்டார். ‘கொம்பன்’ படத்துக்கு கிராமத்து இளைஞராக நடிகர் கார்த்தி இந்த படத்தில் நடிக்க உள்ளார். விருமன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 18-ஆம் தேதி முதல் தேனியில் தொடங்கி இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சூர்யா, கார்த்தி படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion