மேலும் அறிய

Kannathil Muthamittal : சீரியலில் இருந்து விலகும் ’கன்னத்தில் முத்தமிட்டால்’ நடிகை.. அடுத்தடுத்து அடுக்கிய புகார்கள் என்ன?

Manisha Ajith complaints: இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முழு பேமெண்ட் கொடுத்ததேயில்லை. பேமெண்ட் பாக்கி மட்டுமே ரூ. 6 லட்சம். படப்பிடிப்பு செட்டில் பாதுகாப்பே இல்லை.

Manisha Ajith: ஷூட்டிங் செட்டில் பாதுகாப்பே இல்லை...சீரியல் நடிகை அடுக்கும் புகார்கள் 

ஒவ்வொரு வீட்டிலும் இன்று சீரியல் தான் முழுமையான பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. ஒவ்வொரு சேனலும் போட்டிபோட்டு கொண்டு விதவிதமான பெயர்களில் சீரியல்களை ஒளிபரப்புகின்றன. அவைகள் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள் என்ற எண்ணமே இல்லாமல் மூழ்கிவிடும் அளவிற்கு மாறிவிட்டனர் சீரியல் பிரியர்கள். 

என்ன பிரச்சனை மனிஷாவிற்கு? 

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "கன்னத்தில் முத்தமிட்டால்" சீரியல் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால் சீரியல் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆதிரா மதியழகன் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பவர் மனிஷா அஜித். இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணமாக மனீஷா பல புகார்களை அடுக்கி வருகிறார். பேமெண்ட்  பாக்கி, படப்பிடிப்பு செட்டில் பாதுகாப்பின்மை போன்ற பல புகார்களை தெரிவித்துள்ளார். 

Kannathil Muthamittal : சீரியலில் இருந்து விலகும் ’கன்னத்தில் முத்தமிட்டால்’ நடிகை.. அடுத்தடுத்து அடுக்கிய புகார்கள் என்ன?

மனிஷா ஏன் சீரியலில் இருந்து விலகினார்?

ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்ற சேனல்களுக்கு இணையாக பல நல்ல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதில் 100 எபிசோடுகளை கடந்து மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல்களில் ஒன்று "கன்னத்தில் முத்தமிட்டால்" சீரியல்.  

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் மெயின் ரோலில் நடிக்கும் நடிகை மனிஷா அஜித் திடீரென அந்த சீரியலை விட்டு விலகி விட்டதாக அறிவிப்பு விடுத்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கான காரணம் குறித்த கேள்விக்கு தற்போது மனிஷா அஜித் விளக்கம் அளித்துள்ளார். 

பேமெண்ட் பாக்கி :

மனீஷா கூறுகையில் "இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முழு பேமெண்ட் கொடுத்ததேயில்லை. இது வரையில் பாதி பேமெண்ட்  மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொரோன காலகட்டத்திலும் இதே நிலைமை தான். இது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு தற்போது நெருக்கடியில் இருப்பதால் பணம் இல்லை என்று பதில் அளித்தார். பேமெண்ட் பாக்கியில் ஒரு பாதியை மட்டுமாவது கொடுங்கள் மீதியை பிறகு கொடுங்கள் என்றேன். ஆனால் இது வரையில் அந்த மீதி பேமெண்ட்  கொடுக்கவேயில்லை. கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்து கொண்டே இருந்தார். தரேன் என்று சொன்னாலும் இது வரையில் அதற்கு முடிவு வரவேயில்லை என்றார் மனீஷா அஜித். இதுவரை எனக்கு பேமெண்ட் பாக்கியாக உள்ள தொகை ரூ. 6 லட்சம். 

பாதுகாப்பு கிடையாது :

மேலும் படைப்பிடிப்பு செட்டில் பாதுகாப்பே இல்லை. சில சமயங்களில் ஷாக் அடிக்கும், விபத்து நேர்ந்தாலும் நடித்து கொடுத்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திப்பார்கள்.உயிருக்கு உத்தரவாதமே இல்லை. காலை 9 மணிக்கு ஷூட்டிங் தொடங்கி இரவு 9 மணி வரையில் இருக்கும் என கூறுவார்கள் ஆனால் சில சமயங்களில் இரவு 11 மணி வரை ஷூட்டிங் நடக்கும். யாரும் பதில் சொல்ல தயாராக இல்லை. இதற்கு ஒரு தீர்வே கிடைக்காத நிலை இருந்ததால் தான் சீரியலில் இருந்து விலகினேன் என்றார் மனீஷா அஜித்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget