Arabbie : அரபீயில் அட்டகாசமாய் பாஜக தலைவர் அண்ணாமலை... வெளியானது கன்னட திரைப்படத்தின் டீசர்..!
அரபீ திரைப்படத்தில் இரு கைகளையும் இழந்த விஸ்வாசிற்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார்.
![Arabbie : அரபீயில் அட்டகாசமாய் பாஜக தலைவர் அண்ணாமலை... வெளியானது கன்னட திரைப்படத்தின் டீசர்..! Kannada movie](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/07/ca46b73c28e4dd5a87edf648f3332dde_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடிப்பில் உருவாகியுள்ள "அரபீ " கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியானது.
தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் அண்ணாமலை. ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்த அவர் கர்நாடகாவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர், தனது பணியை ராஜினாமா செய்த அவர் தமிழக பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து, அவர் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் அண்ணாமலை தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்துள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள இந்த படம் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம். இந்த படத்தில் இரு கைகளையும் இழந்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஸ் நடித்துள்ளார்.
இந்த படத்திற்காக நடிகர் அண்ணாமலை ரூபாய் 1 மட்டும் ஊதியமாக பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)