Kangana Ranaut: "எனக்கு கல்யாணம் ஆகாம இருக்குறதுக்கு இவங்கதான் காரணம்.." - உண்மையை உடைத்த கங்கனா..!
தனக்கு ஏன் திருமணம் ஆகாமல் இருக்கிறது என்பது குறித்தான கேள்விக்கு பிரபல நடிகை கங்கனா பதிலளித்துள்ளார்.
தனக்கு ஏன் திருமணம் ஆகாமல் இருக்கிறது என்பது குறித்தான கேள்விக்கு பிரபல நடிகை கங்கனா பதிலளித்துள்ளார்.
இது பற்றி நேர்காணல் ஒன்றில், தாகத்தில் வரக்கூடிய அக்னி கேரக்டரும் உங்களது ரியல் லைஃப் கேரக்டரும் ஒன்னா என்று கேட்க, “இல்லை.. ரியல் லைஃப்பில் யாரை நான் அப்படி அடிக்க முடியும். எனக்கு இதுவரை திருமணம் நடக்காம இருக்குறதுக்கு காரணம் என்னைப் பற்றி பரவும் வதந்திகள்தான். ஆமா, நான் ஆம்பளைங்கள அடிப்பேன் அப்படினெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன.” என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram
ரஜ்னீஸ் காய் இயக்கத்தில் நடிகை கங்கனா நடிப்பில் வருகிற மே 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தாகத்’. இந்தப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கங்கனா, “ சமஸ்கிருதம்தான் கன்னடம், இந்தி, தமிழ் மொழிகளைவிட பழமையானது. சமஸ்கிருதத்தில் இருந்து கூட பல மொழிகள் உருவாகியிருக்கலாம். இந்த காரணத்தால் சமஸ்கிருதம் ஏன் நாட்டின் தேசிய மொழியாக இருக்கக்கூடாது.” என்று பேசியிருந்தார். இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
राजस्थान में ऐसी सरकार लाएं जो हिंसा कंट्रोल करें, या फिर बुलडोजर भिजवा दें - Kangana Ranaut pic.twitter.com/AkzXHe7GNL
— Ravi 07 (@Ravisre07) May 6, 2022
இந்தப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ராஜஸ்தான் சென்றிருந்த கங்கனா, “ராஜஸ்தானைப் பொருத்த வரையில், இங்கு கலவரங்கள் நடைபெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் அரசுகளைக் கொண்டு வாருங்கள். இல்லையெனில் நாங்கள் புல்டோசர்களை அனுப்புவோம்’ எனக் கூறியிருந்தார்.