மேலும் அறிய

Thalaivi Release: தியேட்டருக்கு வரும் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா! - ’தலைவி’ அப்டேட் வெளியானது

ஓ.டி.டி., தளங்களான நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் பெரிய அளவில் வெளியாகும் என ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த்சாமி, கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான ’தலைவி’ திரைப்படம் விரைவில் இந்திய அளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ.டி.டி., தளங்களான நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் பெரிய அளவில் வெளியாகும் என ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில்  தற்போது திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  நெட்பிளிக்ஸில் இந்தியிலும், அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தொடக்கத்தில் தலைவி எனத் தமிழிலும் ஜெயா என தெலுங்கு மற்றும் இந்தியிலும் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் பின்னர் மூன்று மொழிகளிலும் ‘தலைவி’ என்றே மாற்றப்பட்டது. மேலும் டிசம்பர் 2020ல் திரைப்படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் ஏப்ரல் 2021ல் திரைப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. பின்னர் தேதி அறிவிக்கப்படாமல் வெளியாகும் தேதி தள்ளிப்போடப்பட்டது. இதையடுத்துதான் தற்போது படம் திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்கிற அறிவிப்பை நேற்றுதான் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக, கங்கனா ரணாவத் தொடர்ச்சியாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்ட சர்ச்சை கருத்தால் அவரது ட்விட்டர் கணக்கே முடக்கப்பட்டது. அண்மையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானதை அடுத்து அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த கங்கனா ஏடாகூடமாக கருத்துக் கூறியிருந்தால் அந்தப் பதிவையே நீக்கியது இன்ஸ்டாகிராம். தனது பதிவு நீக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமையே கலாய்த்தார் கங்கனா. அனைத்து சமூக ஊடகங்களோடும் ‘டிஷ்யூம்’ மோட்டில் இருந்துவருகிறார் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
IPL LSG Win: ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
IPL LSG Vs GT: மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி;  235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி; 235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
TN School Reopening: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Alliance | ”அதிமுகவுடன் கூட்டணி இல்லை” விஜய் உருவாக்கும் மாற்று அணி! ஆதவ் போட்ட ஸ்கெட்ச்!Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
IPL LSG Win: ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
IPL LSG Vs GT: மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி;  235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி; 235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
TN School Reopening: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது.? வெளியான முக்கிய தகவல்
Trump's Drama: ட்ரம்ப்பின் டகால்டி வேலை; இங்க ஒண்ணு சொல்றது அங்க ஒண்ணு சொல்றதுன்னு இருந்தா எப்படி பாஸ்.?
ட்ரம்ப்பின் டகால்டி வேலை; இங்க ஒண்ணு சொல்றது அங்க ஒண்ணு சொல்றதுன்னு இருந்தா எப்படி பாஸ்.?
TASMAC Scam: “வரிப் பணத்த யார் சுருட்டுனாலும் தப்புதான், மக்களுக்கு பதில் சொல்லியே ஆகணும்“ வெடித்த தமிழிசை
“வரிப் பணத்த யார் சுருட்டுனாலும் தப்புதான், மக்களுக்கு பதில் சொல்லியே ஆகணும்“ வெடித்த தமிழிசை
Modi on Indian Military: தீரமிக்க இந்திய முப்படைகளால் பாகிஸ்தான் மண்டியிட்டது - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
தீரமிக்க இந்திய முப்படைகளால் பாகிஸ்தான் மண்டியிட்டது - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
TN School Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?
Embed widget