Kana Kaalum Kalangal: “பிச்சைக்காரன் கூட....” : மீடியாவில் இருந்து விலகுவது குறித்து ‘கனா காணும் காலங்கள்’ புலி
இன்னும் ஒரு 6 வருசத்திற்கு நான் மீடியாவில் இருந்து விலக போறேன். நான் எடுத்த முடிவு ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் தான் ஆனா எனக்கு வேற வழி தெரியல என தெரிவித்திருக்கிறார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 90ஸ் கிட்ஸ்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கனா காணும் காலங்கள்' பள்ளியின் கதை, கல்லூரியின் கதை என 2 பிரிவுகளாக வெளிவந்தது. கல்லூரியின் கதையை காட்டிலும் இன்றளவும் முதல் முதலில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் பள்ளியின் கதை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று.
தொடர் ஆரம்பிக்கும் முன்பு வெளியாகும் பாடலான "கனவுகள் காணும் வயசாச்சு, இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு" பாடல் இன்றும் பலரது செல்போன்களில் ரிங்க்டோனாக ரிங்காரம் அடித்து வருகிறது. இந்த தொடரில் நடித்த பலரும் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நாயகன், நாயகியாக ஜொலித்து வருகின்றனர். அந்தவகையில் இந்த இரண்டு சீசன்களிலும் காமெடி நடிகராக நடித்து மிகவும் புகழ்பெற்றவர் ராகவேந்திரன் என்கிற புலி, தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டா வீடியோவில், நான் வருத்தத்துடன் தனது மோசமான நிலை குறித்து பேசினார். அதில், இன்னும் ஒரு 6 வருசத்திற்கு நான் மீடியாவில் இருந்து விலக போறேன். நான் எடுத்த முடிவு ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் தான் ஆனா எனக்கு வேற வழி தெரியல. கிட்டத்தட்ட மீடியாவில் 15 வருடமாக இருந்து வருகிறேன்.
View this post on Instagram
புலி என்கிற பெயர் தான் எனக்கு அடையாளம். அது மூலமா தான் என் பயணம் தொடங்குச்சு. நான் இப்ப நடித்து வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலையும் இன்னும் 2 மாதம்தான் என் கதாபாத்திரம் இருக்கும் என்று எனக்கு தெரியும். இத்தனை வருட மீடியா வாழ்க்கையிலும் நான் யார் என்று பல பேருக்கு தெரியவில்லை. சமூக வலைதளங்களில் என் பெயர் போட்டு தேடினால் கூட யாருக்கும் தெரியவில்லை.
எத்தனை ஆண்டு காலம்தான் என் பெற்றோர்களும் எனக்காக காத்திருப்பார்கள். எனக்காக நிறைய விட்டுகொடுத்து விட்டார்கள்.அவர்களுக்கு இதுக்குமேலும் பாரமாய் இருக்க விரும்பவில்லை.இந்த 15 வருட மீடியா வாழ்கையில் என்னை வளர்த்துவிட்டவர்கள், எனக்கு தெரிந்தவர்கள், என் மீடியா நண்பர்கள் என அனைவரிடம் வாய்ப்பு கேட்டுவிட்டேன். யாரும் உதவவில்லை.
கமல் சார் மற்றும் விஜய் சார் கூட நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. இப்பொழுது, மீடியாவில் இருந்து வெளியேறி வேறு ஒரு வேலைக்குபோய் ஏதாவது பணம் சேர்த்து வைத்திருந்தால் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மீடியாவில் நான் வர வாய்ப்பு இருக்கும். இல்லை என்றால் அதுவும் கிடையாது. தற்போது, நான் நடித்து வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் 2 மாதங்களுக்கு முன் மாதம் 6000 ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றேன். அதன் பின் 3500 ரூபாய் ஒரு நாளுக்கு கொடுத்தார்கள். பிச்சைக்காரனே என்னை விட அதிகம் சம்பாதிப்பான் என்று தெரிவித்துள்ளார்.