Lingusamy : நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் இணைகிறதா உத்தமவில்லன் கூட்டணி... லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன்
உத்தமவில்லன் திரைப்படத்தால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மீண்டும் ஒரு திரைப்படம் மூலம் இணைய உள்ளார்கள் தயாரிப்பாளர் லிங்குசாமி - கமல்ஹாசன் கூட்டணி.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கீழ் 2015ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரித்தார். ரமேஷ் அரவிந்தன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கே.பாலசந்தர், ஆண்ட்ரியா ஜெரெமையா, பூஜா குமார், ஊர்வசி, கே.விஸ்வநாத், நாசர், ஜெயராம், எஸ்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் நெகடிவ் விமர்சனங்களால் தோல்வியை சந்தித்த உத்தமவில்லன் திரைப்படத்தால் மிகுந்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
உத்தமவில்லன் படுதோல்வி :
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் லிங்குசாமி. அவர் கூறுகையில் "உத்தமவில்லன் திரைப்படத்தை நான் முழுமனதுடன் தான் தயாரித்தேன். உலக நாயகன் கமல்ஹாசன் உடன் பணிபுரிந்ததே ஒரு பெரிய பாக்கியம். உத்தமவில்லன் திரைப்படத்தின் தோல்விக்கு அவர் காரணம் என நான் என்றுமே கூற மாட்டேன். திரும்பவும் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்" என லிங்குசாமி தெரிவித்து இருந்தார்.
Director #Lingusamy in recent function: " #KamalHaasan & #ThirupathiBrothers will unite again for a new film "#UttamaVillain Producer and Actor combo to unite for a new project!!#UttamaVillain is one of my personal favourite movie of #KamalHaasan #KH#Kamal#Ulaganayagan
— Kolly 360° (@KTownUpdate) January 4, 2023
மீண்டும் இணையும் கூட்டணி :
அந்த வகையில் லிங்குசாமி தற்போது அறிமுக இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பிகினிங்’ திரைப்படத்தை தயாரிக்கிறார். அப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் லிங்குசாமி கூறுகையில் உத்தமவில்லன் திரைப்படத்தின் தோல்வியால் பல திரைப்படங்களை வெளியிட முடியாத நிலைக்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தள்ளப்பட்டதாக தெரிவித்தார். அந்த நஷ்டத்தை ஈடு செய்வதற்காக நடிகர் கமல்ஹாசன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்து கொடுக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
'ஆனந்தம்' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை மனதில் வைத்து லிங்குசாமி எழுதிய திரைக்கதையின் டைட்டில் 'மதி'. அந்த திரைப்படம் அந்த சூழ்நிலையில் எடுக்கமுடியாமல் போனதால் அதை மீண்டும் புதுப்பித்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார் லிங்குசாமி.
இப்படத்தை லிங்குசாமி தயாரிக்க உள்ளார் ஆனால் இயக்குனர் யார் எனும் விவரம் தெரியவில்லை. தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு உள்ளார். அதனை தொடர்ந்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிப்பாரா அல்லது மணிரத்னம் இயக்கும் KH234 திரைப்படத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

