Box Office King Kamalhassan: நம்பர் 1 பாக்ஸ் ஆஃபிஸ் கிங் பட்டம்.. கமல்ஹாசனுக்கு மகுடம் சூட்டிய பிரபல நாளிதழ்!
விக்ரம் படத்தின் சாதனையை அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நொ.1 பாக்ஸ் ஆபிஸ் கிங் பட்டத்தை அழகித்துள்ளார் பிரபல ஆங்கில இணைய நாளிதழ்
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மாபெரும் கலைஞன் என்ற ஒரு அழிவில்லா முத்திரையை படைத்த ஒரு கலைஞன் உலகநாயகன் கமல்ஹாசன். இந்த பன்முக கலைஞன் சினிமா உலகிற்கு கிடைத்த ஒரு வரம் என்றே சொல்லலாம். தனது திரை வாழ்வில் எத்தனையோ சாதனைகளை படைத்த இந்த நடிகரின் வெற்றிப்பயணம் இன்றும் தொடர்கிறது. பலருக்கும் ஒரு ரோல் மாடலாக விளங்கும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ஹிட் 'விக்ரம்' திரைப்படம்.
ஹவுஸ் ஃபுல் காட்சிகள் :
இளைய தலைமுறையினரின் அபிமான இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம்'. உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியானது. மற்ற கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து அவர்களையும் வளர வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கமல்ஹாசன், எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் இப்படத்திற்கு அனைவருடனும் இணைந்து நடித்திருந்தார்.
அதே போல ஒரு திறமையான கலைஞனை மனதார பாராட்டவும் சிறிதும் தயங்காதவர் கமல்ஹாசன். விக்ரம் திரைப்படம் வெளியான நாள் முதல் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கொண்டாடப்பட்டது. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையில் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நகர்த்தியது பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்து இருந்தது இசையமைப்பாளர் அனிருத்தின் இசை.
வசூலில் சாதனை :
விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது விக்ரம் திரைப்படம். இதுவரையில் கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் இதுவாகும். முதல் நாளே 32 கோடியை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை கலக்கிய விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் 400 கோடியை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. இப்படத்தின் அமோக வெற்றியை அடுத்து கமல்ஹாசனின் டிமாண்ட்டும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#100DaysofVikram #VikramRoaringSuccess@Udhaystalin @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/bfer3TDGzF
— Vikram (@VikramMovie) September 9, 2022
பாக்ஸ் ஆபிஸ் கிங் பட்டம் :
சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் அபாரமான நடிப்பு பாராட்டுகளை வழக்கம் போல குவித்தன. அந்த வகையில் பிரபல இணைய நாளிதழ் "ஸ்டார் டொமைன்" தேர்வின் படி 2022ம் ஆண்டிற்கான நொ. 1 பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.